HomeGeneralதேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

Published on

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2026 நவம்பர் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் ஸ்ரீநாத், அமைச்சர் வன்னி அரசு, திலீப் குமார் சென்னை மத்திய மாவட்ட தெற்கு செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர்  தமிழ்குமரன், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி, மற்றும் இயக்குநர் பி. வாசு, ராதாரவி, பாண்டியராஜன், ஹிப் ஹாப் ஆதி, டி. இமான், ராமராஜன்,   வைரமுத்து, பா. ரஞ்சித், நடிகர் சவுந்தர் ராஜா நடிகர் ஜெய், ஓய். ஜி. மகேந்திரன்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய தேவாவின் புதல்வர் ஸ்ரீகாந்த் தேவா கலந்துகொண்ட அமைச்சர்கள் முன்னிலையில்
1. தேவா அவர்களுக்கு  மணிமண்டபம்
2. பத்மநாபன் தெரு விற்கு தேவா பெயர் வைக்க கோரி
3.இன்றைய நாளை (நவம்பர்20 ) கானா தினம் என்று அறிவிக்க கோரி.. ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட திரையுலக பிரமுகர்களும் இசைக் கலைஞர்களும் ‘இது வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சி அல்ல; தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்ட ஒரு இசை மேதைக்குச் செலுத்தப்பட்ட மரியாதை ‘ என்று மனம் நெகிழ்ந்தனர்.

Latest articles

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

தயாரிப்பாளர் கண்ணன் ரவி உள்ளிட்ட பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா! 

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில்...

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மொழி மற்றும் எல்லைகள்...

More like this