HomeMovie Reviewகோந்தல் சினிமா விமர்சனம்

கோந்தல் சினிமா விமர்சனம்

Published on

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தவாகர்.

சுமன் புதுமணப் பெண். இரவு முழுக்க ஊர் கூடி நடக்கிற ‘கோந்தல்’ என்கிற பாரம்பரிய வழிபாட்டுச் சடங்கில் சொந்த பந்தம் அக்கம் பக்கம் என எல்லோரும் கூடியிருக்க, அந்த நிகழ்ச்சியில் கணவனுடன் கலந்து கொள்கிறாள்.

அவளுக்கு நடந்தது கட்டாய கல்யாணம். அந்த வெறுப்பில் இருக்கும் அவள் கோந்தல் நடக்கும் இரவில், தன் காதலன் மூலமோ அல்லது தன் இளமையை அனுபவிக்க காத்திருக்கும் ஊர்த் தலைவரின் மகன் மூலமோ கணவனை கொலை செய்ய திட்டமிடுகிறாள்.

இரவு முழுதும் கடந்து பொழுது விடிந்தபின் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நிறைவுக்கு வருகிறது. அருகில் மூன்று பேர் மரணமடைந்திருப்பது தெரிகிறது.

யார் அவர்கள் என்பதில் ஆடியன்ஸுக்கு எந்த சஸ்பென்ஸும் கிடையாது. இரண்டு பேர் எதற்காக யாரால் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை காண்பித்து விடுகிறார்கள். மீதமிருக்கும் ஒருவர் யார், அவரை போட்டுத் தள்ளியது யார் என்பதை கிளைமாக்ஸில் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மனதுக்கு பிடிக்காமல் நடந்த கல்யாணத்தையும் கணவனையும் வெறுப்பது, கணவனைக் கொல்வதற்காக காதலனையும் காம தாகம் கொண்டவனையும் உசுப்பேற்றுவது, தான் திட்டமிட்டதில் பாதியும் திட்டமிடாததும் நடந்து முடிய அதிர்வது என சுமனாக வருகிற இஷிதா தேஷ்முக்கின் நடிப்பு துடிப்பாக இருக்கிறது.

கோந்தல் சடங்கை முன்னின்ரு நடத்துபவராக கிரிஷ் கடம் எளிமையிலும் கம்பீரம் என்பது போல் பங்களித்திருக்க நாயகியின் கணவனாக, காதலனாக, ஊர்த் தலைவராக, ஊர்த் தலைவரின் மகனாக, கூத்துக் கலைஞர்களாக என நடிகர் நடிகைகள் ஏராளம். பங்களிப்பு கச்சிதம்.

மாராத்திய பாரம்பரிய கோந்தல் வழிபாடு ஒரு பக்கமிருக்க, இரவு முழுதும் கூத்துக் கலைஞர்கள் ஆடிப் பாடுவது படம் முழுக்க நீள்கிறது. அந்த கலை கலாச்சார நிகழ்ச்சிகளை இசைஞானி இளையராஜாவின் இசையில் பார்ப்பதும் கேட்பதும் சிலிர்ப்பான அனுபவம்.

இருளிலும் தீப்பந்தங்கள் தருகிற வெளிச்சத்திலுமே கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவின் தரத்தை தனியாக பாராட்ட வேண்டும்.

வித்தியாசமான படங்களை நேசிப்போர் புதுவித அனுபவத்திற்காக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்று காத்திருக்கிறது என்பது ஸ்பெஷல் தகவல்.

Rating 3.5 / 5

Latest articles

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

‘யானைமரம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரும், இயக்குநருமான சேரன், ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்து,...

More like this