HomeMovie Reviewபிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

Published on

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி வாங்கடா மோதிப் பார்க்கலாம் என்று சவால் விடுவது போல் ஒரு காட்சி.

மனதில் ஓட்டிப் பாருங்கள். மாஸ் ஹீரோக்களுக்கு வைக்கிற சீன் போல இருக்குமே. ஆமாம், அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.

சரி வில்லன்கள் என்ன செய்தார்கள்?

தலைமுடிகளை ஏற்றிச் சென்ற லாரியைக் கடத்தி, லாரியை ஓட்டிய தன் அப்பாவை துன்புறுத்திக் கொன்றார்கள்.

இப்படி சொன்னதும், என்னது தலைமுடியைக் கடத்தினார்களா? அதை வைத்து என்ன செய்வார்கள்? என்றெல்லாம் யோசிப்பீர்கள்.

தலைமுடியை கடத்தியது பணத்துக்காக என்பதை விரிவாகவும், தலைமுடியை வைத்து என்ன செய்வார்கள் என்பதை சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.

ஹீரோ வெற்றிக்கு அப்பாவின் இழப்புக்கு பழி வாங்குகிற வேலை. அதை பொருத்தமான உணர்வுகளுடனும் உடல்மொழியோடும் செய்திருக்கிறார். ஹீரோ என்றாலும் காட்சிகள் குறைவுதான். அதிலேயே காதலியோடு கொஞ்சவும் மிஞ்சவும் வாய்ப்பிருக்கிறது.

பணத்துக்காக கொலை செய்கிற கும்பலின் தலைவனாக கராத்தே வெங்கடேஷ் மிரட்டுகிறார்; தலைமுடி ஏற்றுமதி பிஸினஸில் ஈடுபட்டு அதன் காரணமாக மோதிக் கொள்கிறவர்களில் ஒருவராக அருள் டி சங்கர் கெத்து காட்ட அவரின் போட்டியாளராக அதட்டலும் உருட்டலுமாக வலம் வருகிறார் இயக்குநர் ஏ வெங்கடேஷ்.

வெற்றியின் அப்பாவாக லிவிங்ஸ்டன், வேலை மீது காட்டும் ஈடுபாடும் முதலாளி மீது காட்டும் விசுவாசமும் கதைக்கு பலம்.

ஹீரோவை காதலிப்பது, அவன் சிக்கலில் இருந்தால் மனம் தளர விடாமல் பார்த்துக் கொள்வது, பாடல் காட்சியில் நிரம்புவது என்ற டெம்ப்ளேட் பணிகளை நிறைவாகச் செய்திருக்கிறார் பிரியாலயா.

போலீஸ் இன்ஸ்பெக்டராக அபிராமி வெங்கடாசலம் ஆளுமையாக வந்து போகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் மூர்த்தி அயோக்கிய போலீஸாக வந்து திருந்துகிற கடமையை கச்சிதமாக செய்திருக்க திருட்டு, கொலை, கடத்தல் என பரபரக்கும் திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசையைத் அதிரடியாக தந்திருக்கிறார் கவாஸ்கர் அவினாஷ். சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் கூடியிருக்கின்றன.

திருட்டு, ரவுடியிஸம், கடத்தல், கொலை என வரிசை கட்டும் காட்சிகள் பார்த்துப் பழகியவைதான் என்றாலும், மனிதர்களின் தலைமுடியைச் சுற்றிச் சுழல்கிற உலகளவிலான வணிகத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பது படத்திலிருக்கும் வித்தியாசம்.

Rating 2.5 / 5

Latest articles

ஜான் டோ சினிமா விமர்சனம்

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன்...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா ‘ஜெயில் மேட்ஸ்’ டைட்டில் டீசர் வெளியீடு! ‘

https://www.youtube.com/watch?v=JbzG65fILLM புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக...

More like this