HomeMovie Reviewஜான் டோ சினிமா விமர்சனம்

ஜான் டோ சினிமா விமர்சனம்

Published on

கேரள போலீஸ் ஒரு சிறுவன் இறந்துபோனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. தமிழ்நாடு போலீஸ் ஒரு சிறுவன் காணாமல் போனதன் பின்னணியை அலசி ஆராய்கிறது. ஒரு கட்டத்தில் சிறுவன் இறந்து போனது, சிறுவன் காணாமல் போனது என இரண்டு கேஸ்களையும் கேரள போலீஸும் தமிழக போலீஸும் இணைந்து விசாரிக்கும்படியான சூழ்நிலை.

என்ன விசாரித்தார்கள், என்ன கண்டறிந்தார்கள் என்பதை ராட்சசன் பட ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா.

கேரள போலீஸ் அதிகாரியாக அர்ஜுன்தாஸ். தன்னை இழிவுபடுத்திப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்த அப்பாவால் ஏற்பட்ட உளவியல் பிரச்சனையை பிரதிபலிப்பதாகட்டும், உயரதிகாரிகளால் மரியாதைக் குறைவாக நடத்தப்படும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதாகட்டும், வழக்கு விசாரணையில் சுறுசுறுப்பாக செயல்படுவதாகட்டும் நடிப்பு கச்சிதம்.

அர்ஜுன்தாஸை புரிந்து கொள்ளாமல் உயரதிகாரிக்கான கம்பீரம், அலட்டல், திமிர் காட்டுவது புரிந்து கொண்டபின் அவருக்குரிய மதிப்பளித்து வேலையை சின்சியராக பார்க்கிற அதிகாரியாக வலம்வருவது என சஞ்சனா நடராஜனின் நடிப்பு அசத்துகிறது.

கதையின் முக்கிய கேரக்டரை ஏற்றிருக்கிற சிறுவன் நீரவ், நீரவ்வின் அம்மாவாக ஸ்ரிஷ்டி, அக்காவாக ஜாரா வினீத் சந்தோக், மற்ற கேரக்டர்களில் ஜெயபிரகாஷ், அனுபமா குமார்… ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கவனிக்க வைக்கிறார்கள்.

குளிர்ப் பிரதேசப் பகுதிகள் கதை நிகழ்விடங்களாக இருக்க வளைத்துச் சுருட்டி விஷுவல் விருந்து வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். கதையோட்டத்தின் திக்திக் தருணங்களில் விறுவிறுப்பான பின்னணி இசையை படரவிட்டிருக்கிறார் முஜீப் மஜீத்.

ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட சிறுவர்களை சைக்கோ கொலைகாரன் குறிவைத்து ஒரே மாதிரியாக கொல்வது என்கிற பய நரம்புகளை உசுப்பேற்றுகிற கதையை எடுத்துக் கொண்டு அதற்கான திரைக்கதையில் அலற விடுகிற விஷயங்களை பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிற இயக்குநர் மதுமிதா கொலைக்கான காரணத்தை வேறு விதமாக யோசித்திருக்கலாம்.

Rating 3 / 5

Latest articles

பிளாக் கோல்டு சினிமா விமர்சனம்

ஹீரோ வில்லன்களை சுற்றி வளைத்தபின் ஒரு இடத்தில் வெறித்தமான பார்வையுடன் உட்கார்ந்து, கையில் ஒரு இரும்புத் துண்டை பிடித்தபடி...

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கம் அமைப்பில், கலாச்சாரம் மற்றும்...

தெருக்குறள் அறிவின் காதலின் அழகான உணர்வுகளைச் சொல்லும் ‘ஹலோ’ ஆல்பம் பாடல்! 

https://www.youtube.com/watch?v=Y2v2XjyTP4o Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ இசை ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா ‘ஜெயில் மேட்ஸ்’ டைட்டில் டீசர் வெளியீடு! ‘

https://www.youtube.com/watch?v=JbzG65fILLM புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக...

More like this