HomeGeneralநூறு கோடி வானவில் சினிமா விமர்சனம்

நூறு கோடி வானவில் சினிமா விமர்சனம்

Published on

தொடர்ந்து உணர்வுபூர்வமான படங்களை தருகிற சசி இயக்கியிருக்கிற படம்.

‘ஹீரோயின் சென்ட்ரிக் ஃபிலிம்’ என்று சொல்லப்படுகிற, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதையில் உருவாகும் படங்களின் வரிசையில் ‘நூறு கோடி வானவில்.’

தன் காதலன் விபத்தில் சிக்கி கோமாவிலிருக்க, உடனிருந்து கவனித்துக் கொள்கிறாள் இளம்பெண் ஃபெனி. அவளுக்கு டி வி சேனலில் ஆங்கராக பணியாற்றி புகழ்பெற வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவு ஒன்றில் பார்வையாளர்களைக் கவர்கிற நிகழ்ச்சிகளை உருவாக்குகிற வினோ என்ற இளைஞன் மூலம் நிறைவேறுகிறது. ஒரு கட்டத்தில் அந்த வினோ ஃபெனியைக் காதலிக்க, ஃபெனிக்கும் உருவாகிறது வினோ மீது ஈர்ப்பு.

இப்படி, கதை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்ட, ஃபெனியின் காதலன் கோமாவிலிருந்து மீள்கிறான். அதன்பின் ஃபெனியின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் உருவாகிறது என்பதே மீதிக் கதை…

சேனல் பணியில் கிரியேட்டராக பரபரப்பு, காதலில் விழும்போதும் அதில் தோல்வியைச் சந்திக்கும்போதும் அதற்கேற்ற முகபாவம், உடல்மொழி என வினோவாக ஹரிஷ் கல்யாண்.

சேனலில் ஆங்கராக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் நாட்களை கடத்துவது, அந்த லட்சியத்தை அடைய வாய்ப்பு கிடைத்தபின் திறமை காட்டுவது, அந்த பக்கம் காதல் இந்தப் பக்கம் ஈர்ப்பு என தவிப்பான மனநிலை… முழுக்க முழுக்க உணர்வுகளால் நிரப்ப வேண்டிய கனமான கதாபாத்திரம். மிகச் சரியான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார் ஃபெனியாக வருகிற சித்தி இத்னானி.

சித்தி இத்னானியின் காதலனாக ரினில். தன்னைக் காதலிப்பவள் தன்னை வெறுக்கிற அளவுக்கு டாக்ஸிக்’காக நடந்து கொள்கிற கேரக்டரில் கவனம் பெறுகிறார்.

வி ஜே பார்வதிக்கான எழுதப்பட்டுள்ள வசனங்களும் அதை டெலிவரி செய்கிற காட்சிகளும் ரசிக்கும் ரகம்.

தம்பி ராமையா, கோவை சரளாவெல்லாம் இருந்தாலும் அவர்களுக்கான கேரக்டர்கள் காமெடி கலாட்டாக்களில் ஈடுபட வாய்ப்பில்லாதது. கொடுத்த வேலையை செய்திருப்பது குறையில்லாதது.

காதல் உணர்வுகளை மையப்படுத்திய கதைக்கேற்ற உயிரோட்டமான பின்னணி இசையையும் இதம் தரும் பாடல்களையும் தந்திருக்கிறார் சித்துகுமார். பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் குறிப்பிட்டுச் சொல்ல பல அம்சங்கள் உண்டு.

ரொம்பவே பழக்கப்பட்ட கதை. இப்படித்தான் இருக்கும் என யூகித்தபடியே நகரும் திரைக்கதை. அதையெல்லாம் தாண்டி கவித்துவமான சிலபல காட்சிகளாலும், பிரதான கேரக்டர்களை ஏற்றவர்களின் கச்சிதமான நடிப்பாலும் நூறு கோடி வானவில் ஒரு தடவை பார்க்கலாம் ரக படைப்பாகியிருக்கிறது. படம் ZEE5 ஓ டி டி தளத்தில் நவம்பர் 6; 2026லிருந்து ஸ்ட்ரீமாகிறது.

Rating 3. 5 / 5 

Latest articles

சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் இயக்குநர் மோகன் ராஜா!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஆர்யா மற்றும் ஜெயம்...

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு- தமிழ் திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி...

பல வருடங்கள் கழித்து இந்த படத்திற்காக நடனம் ஆடியிருக்கிறேன்! -‘சிக்னல் அட் 11:30′ பட விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உற்சாகம்

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30.' இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும்...

அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக்...

More like this