HomeGeneralகொலையாளி அல்ல, நான் காதலன். அதிரடியான வாசகத்துடன் நடிகர் ஷாருக்கானின் ‘KING’ படத்தின் புதிய போஸ்டர்!

கொலையாளி அல்ல, நான் காதலன். அதிரடியான வாசகத்துடன் நடிகர் ஷாருக்கானின் ‘KING’ படத்தின் புதிய போஸ்டர்!

Published on

இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்‌ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்‌ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர், ‘கிங்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், இந்த அவதாரத்தில் ஷாருக்கானை வெள்ளித்திரையில் கண்டு ரசிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதற்கான மற்றொரு காரணத்தையும் அளித்திருக்கிறது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதனிடையே, ‘பதான்’ படத்தின் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடர்ந்து, மீண்டும் ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் இப்படத்தின் மூலம் திரையுலகில் முழு நீள திரைப்படத்தில் அறிமுகமாவதாலும், ‘கிங்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும் சர்வதேசத் திரையுலக வணிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இளமைத் துள்ளல் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்’. ஏ....

யோகிபாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27-ம் தேதி ரிலீஸ்!

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தி!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தி இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்....

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு!

ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் 'என் சி 51' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன்,...

More like this