HomeGeneral மாறன், சென்ராயன் நடிப்பில் வர்ண கதைகள் நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸி வெப் சீரிஸ் பூஜையுடன்...

 மாறன், சென்ராயன் நடிப்பில் வர்ண கதைகள் நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸி வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது! 

Published on

ஓவியக் கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் ‘வர்ண கதைகள்.’
ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ” இறப்பின் ரகசியம் ”  படத்தை இயக்கிய
இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன்,  ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில்  இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும்.
வெப் தொடர் பற்றி இயக்குனர் இமானுவேல் பேசியதாவது…
கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும், ஓவிய கலைஞர்களும் அழிந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்தக் கலையை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சி தான் இந்த ” வர்ண கதைகள் “
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்புக்காகக் காத்திருக்கும் நான்கு நண்பர்கள் ஒரு பயணத்தைத் தொடங்குகின்றனர். அந்தப் பயணத்தில் எதிர்பாராமல்  அவர்கள் சந்திக்கும் ஒரு கதாபாத்திரத்திடம் சிக்கிக்கொள்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கற்பனையுடனும், திகிலுடனும், நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி ஹாரர்  தொடராக இதை உருவாக்குகிறோம்.
முதல் கட்டமாக நான்கு எபிசோடுகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறோம் என்றார் இயக்குனர் இமானுவேல்.
இந்த வெப் தொடரின் பூஜை இன்று படக்குழுவினர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.

Latest articles

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும்...

இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி.. ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!

அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார். ‘Celebrity MasterChef...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றது விஜய் ஆண்டனி மியூசிக்!

மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்...

More like this