HomeGeneralபரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’ , ‘காளிதாஸ்’ படத்தின் இரு பாகங்கள் என அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பரத், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட மலையாளப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் மாதவன், ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடலில் தோன்றி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர். இவர்களின் மாறுபட்ட நடிப்புப் பாணிகள் இணைவது இப்படத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகையும், தமிழில் ‘புல்லட்’ படத்தில் நடித்தவருமான சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ் மற்றும் ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ படங்களில் நடித்த ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை S.R. சதீஷ் குமார், படத்தொகுப்பை அருள் E. சித்தார்த் மேற்கொள்கின்றனர். கலை இயக்கம் – டான் பாலா, சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி, ஒப்பனை – மணி, ஆடை வடிவமைப்பு – லாவண்யா தேசிகன், விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக், தயாரிப்புக் கட்டுப்பாடு – சேது பாண்டியன், ஆடைப் பொறுப்பு – விக்னேஷ், புகைப்படம் – சிவா ஆகியோர் கவனிக்கின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, மனதை நெகிழ வைக்கும் பாசம், உறவுகளின் ஆழத்தை உணர்த்தும் சென்டிமென்ட் எனச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தக் குடும்பமும் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலகலப்பான திரைக்கதையும், திறமையான நட்சத்திரக் கூட்டணியும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமையவுள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவின் எழில்மிகு ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் – மலையாளத் திரையுலகின் திறமையான கலைஞர்கள் இணையும் இந்தப் புதிய கூட்டணி, ரசிகர்களுக்குச் சிரிப்பும் நெகிழ்ச்சியும் நிறைந்த திரையரங்கக் கொண்டாட்டத்தை வழங்கத் தயாராகிறது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

Latest articles

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

 மாறன், சென்ராயன் நடிப்பில் வர்ண கதைகள் நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸி வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது! 

ஓவியக் கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் 'வர்ண கதைகள்.' ஜே.கே. தமிழ் மீடியா...

இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி.. ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!

அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார். ‘Celebrity MasterChef...

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றது விஜய் ஆண்டனி மியூசிக்!

மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்...

More like this

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

 மாறன், சென்ராயன் நடிப்பில் வர்ண கதைகள் நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸி வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது! 

ஓவியக் கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் 'வர்ண கதைகள்.' ஜே.கே. தமிழ் மீடியா...

இரண்டு மடங்கு ஆசை, இரண்டு மடங்கு மகிழ்ச்சி.. ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் களமிறங்கும் ஜூலி!!

அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார். ‘Celebrity MasterChef...