HomeGeneralதமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் இரமணிகாந்தன்!

தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகச் சிந்தனை முதல் சர்வதேச மனிதநேயம் வரை பாடல்களில் பதிவு செய்யும் இரமணிகாந்தன்!

Published on

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பாடல்களை எழுதி, அவற்றை YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன், பாடல் இலக்கியத்தின் வழியாகப் பல்வேறு கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
காதல், வாழ்க்கை அனுபவங்கள், மனிதநேயம், சமூக விழிப்புணர்வு, சமத்துவம், தன்னம்பிக்கை, இயற்கை மற்றும் உறவுகளின் மேன்மை உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் இவர் பாடல்களைப் படைத்து வருகிறார். சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதுடன், மனிதநேயத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் கருத்துகளுக்கும் தனது படைப்புகளில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை உருவாக்கி வெளியிடுவது இவரது படைப்புப் பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழரான,
சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுபவரான  நவநீதம் “நவி” பிள்ளையைப் போற்றும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களை எழுதியுள்ளார்.
உலக அமைதி, மனித உரிமைகள் மற்றும் மனிதநேயம் போன்ற கருத்துகளைப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
தனது பாடல்களை Lyricist Ramanigandhan என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு வரும் இவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயத்தப் பாடல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திரைப்படப் பாடல்கள் எழுதுவதுடன், சமூக அக்கறை மிக்க பாடல்கள், வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் படைப்புகள் மூலமாகவும் தனது பாடல் இலக்கியப் பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.
மொழிகளைக் கடந்து மனித உணர்வுகளையும் சமூகச் சிந்தனைகளையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தி, தனது படைப்புகளைப் பரந்த அளவிலான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் எனப் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியரை தொடர்புகொள்ள:-
தொலைபேசி: 9677289032 / மின்னஞ்சல்: ramanigandhan@gmail.com

Latest articles

5000 மாணவர்கள் முன்னிலையில் விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் ‘நந்தினி’ முதல் பாடல் வெளியீடு!

விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் –...

‘டிரோன்ஸ்’ படக்குழுவினர் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்! -டிரோன்ஸ் பட விழாவில் நடிகை சித்தி இத்னானி

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக்...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும்...

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

More like this