HomeGeneralஅமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் உற்சாகமாய் நடந்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

Published on

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன், “தளபதியுடைய பல படங்கள் ஓடிய திரையில் என்னுடைய தம்பி ஏகன் படம் வெளியாகவிருப்பதும் மகிழ்ச்சி. கடின உழைப்பாளி ஏகன். இயக்குநர், படக்குழு மற்றும் இன்றைய நாயகன் சித்து என எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்ல கருத்துகளோடு பொழுதுபோக்கு அம்சமும் சேர்ந்திருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகவில்லை. ‘ஹைக்கூ’ அந்த குறையை போக்கும். படம் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் யுவராஜ், ” பெரிதாக எந்த கண்டிஷனும் சொல்லாத தயாரிப்பாளர் அருள் சார். அவருக்கு நன்றி. ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. சித்துவின் ஆல்பம் சிறப்பாக வந்துள்ளது. என்னை நம்பி நான் சொன்னதை எல்லாம் செய்த ஏகன், ஃபெமினா, ஸ்ரீதேவிக்கு நன்றி”.
தயாரிப்பாளர் அருளானந்து, “விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படம் இது. சினிமாவில் தெரிவதற்காக 18 வருட உழைப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். நன்றாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என ஏகனிடம் சொல்லியிருக்கேன். என்னிடம் சொன்னதை அப்படியே யுவராஜ் எடுத்திருக்கிறார். எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. விஷன் சினிமாவின் அடுத்து ஐந்து படங்களுக்கும் சித்துதான் இசையமைப்பாளர். இசையும் கவிதை போல வந்திருக்கிறது. படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகர் ஏகன், ” அதிர்ச்சி அருணும் நானும் பல வருடங்களாக நண்பர்கள். பல சீரிஸ் ஒன்றாக நடித்திருக்கிறோம். இப்போது ஹைக்கூ படத்திலும் நடித்திருக்கிறோம். எனக்கு அற்புதமான பாடல்கள் கொடுத்த சித்து சாருக்கு நன்றி. ஹீரோயின்ஸ் இரண்டு பேரும் இயக்குநரை நம்புங்கள். நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்வீர்கள். எனக்கு ஆதரவு கொடுத்த அப்பாவுக்கு நன்றி. 23 ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே ஆன மனஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் துல்லியமாக படமாக்கி இருக்கிறார்கள். அதற்கு சித்து அற்புதமான இசை கொடுத்திருக்கிறார். பாடல்களும் சிறப்பாக உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடையும். ஏகன் பெரிய இடத்தை அடைவார்”.
பாடலாசிரியர் மோகன்ராஜா, “இந்த டைட்டிலுக்கே இயக்குநருக்கு வாழ்த்துக்கள். ஹைக்கூ என்பது ஒரு தரிசனம், அன்பு. எனக்கு பல ஹைக்கூ கவிதைகள் பிடிக்கும். இந்த தலைமுறைக்கும் ஹைக்கூ கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த சித்துவுக்கு நன்றி. ஏகன் இன்னும் பெரிதாக ஜெயிக்க வேண்டும்”.
இசையமைப்பாளர் சித்துகுமார், “‘ஹைக்கூ’ என்னுடைய 15 ஆவது படம். குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. விஷன் சினிமா ஹவுஸ் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏகன் இனிமையானவர். தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்”.
இயக்குநர் சசி, ” மிகவும் எளிமையான கதை ‘ஹைக்கூ’. இரண்டு விதமான காதலை நுணுக்கமாக சொன்ன இயக்குநருக்கும் சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நிச்சயம் இது படக்குழுவினருக்கு மைல்கல் திரைப்படமாக அமையும்”.
தயாரிப்பாளர் தனஞ்செயன், ” ஹைக்கூ படம் நான் பார்த்து விட்டேன் கவிதையான படம். படத்தின் கதை புதிதானது. காதலை முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் நமக்கு காட்டும். இது போன்ற ஒரு கதையை கொடுத்த இயக்குநர் யுவராஜ்க்கு வாழ்த்துக்கள். ஹீரோயின்கள் இருவரும் கியூட். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் “.
நடிகர் அதிர்ச்சி அருண், “‘ஹைக்கூ’ படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் அருள் சார் மற்றும் இயக்குநருக்கு நன்றி. மலையாளப் படங்ககும், மலையாள நடிகர்களும் தமிழுக்கு வந்தால் ஹிட்தான். அந்தவகையில், ஹீரோயின் ஃபெமினாவும் ஹிட் ஆவார். ஸ்ரீதேவி திறமையானவர். ஹீரோ ஏகன் எனக்கு தம்பி மாதிரி. பெரிய ஹீரோவாக வருவார். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.
இயக்குநர் பொன்ராம், “வித்தியாசமான லவ் ஸ்டோரி ‘ஹைக்கூ’. மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவன் எனும் லைன் நன்றாக இருந்தது. நகைச்சுவை, லவ் என டிரெய்லர் கலாட்டாவாக இருந்தது. சித்து இசை அருமை. ஏகன் கருப்பு வைரம். நிச்சயம் நல்ல இடத்திற்கு செல்வார். ஃபெமினா, ஸ்ரீதேவி அருமையான நடிகர்கள். கலர்ஃபுல்லாக, பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் அருள் சார் படம் எடுத்துள்ளார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.
நடிகை ஃபெமினா, “நான் முதலில் பார்த்த தமிழ் படம் தளபதியின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம்தான். ஹைக்கூ எனக்கு ஸ்பெஷலான படம். ஏகன் சிறந்த நடிகர். ஸ்ரீதேவியும் நானும் ஒரு நாள் இணைந்து நடித்தோம். படக்குழுவினருக்கு நன்றி. என்னை இந்த படத்தில் அழைத்து வந்த சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி. சித்து இசை பிரம்மாதம். படம் உங்களுக்கும் பிடிக்கும். என் குடும்பத்தை பெருமைப்படுத்தும் படமாக இது இருக்கும்”.
நடிகை ஸ்ரீதேவி, ” தமிழில் நான் அறிமுகமாகும் படம் ஹைக்கூ. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி”.
ஆர்ஜே நிதி, “இது எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த யுவராஜூக்கும் விஷன் சினிமா ஹவுஸூக்கும் நன்றி. சித்து இசையில் கலக்கி இருக்கிறார். ஏகன், அருண் என எல்லோரும் கலகலப்பாக வைத்திருந்தார்கள். அக்டோபர் 23 அன்று படம் ரிலீஸ் ஆகிறது”.

Latest articles

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

SPR City, Chennai, to Attempt World Record for World’s Tallest Golu at 47.8 Feet!

Inspired by SPR City’s 47-floor residential tower, the 47.8-foot Golu featuring over 4,500 dolls...

சென்னையில் உற்சாகமாய் நடந்த, நெப்போலியன் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’யின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

நெப்போலியன் நடிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட...

”டோரதி’ திரைப்படத்தின் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய படக்குழு!

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும்...

More like this

தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி.’

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா...

SPR City, Chennai, to Attempt World Record for World’s Tallest Golu at 47.8 Feet!

Inspired by SPR City’s 47-floor residential tower, the 47.8-foot Golu featuring over 4,500 dolls...

சென்னையில் உற்சாகமாய் நடந்த, நெப்போலியன் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’யின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

நெப்போலியன் நடிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட...