விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ‘ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்’ ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய செந்தில் கே.வீரய்யா முதன்முறையாக இயக்கியுள்ள ‘மானிடன்.’
கதையின் நாயகனாக புதுமுகம் தினேஷ் சந்திரா நடிக்க நாயகியாக புதுமுகம் சினேகா நடிக்கிறார்.
வில்லனாக சேரன் ராஜும் காமெடி கதாப்பாத்திரத்தில் வேல்முருகனும் ஊருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கும் ஊர்ப் பெரியவராக தயாரிப்பாளர் ஜேம்ஸும் நடித்திருக்க, கண்ணபிரான், பாஸ்கர் லட்சுமி, ராகவன், மீசை ராஜா உள்ளிட்ட புதுமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி மற்றும் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊட்டி, தேனி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
கிராமத்தில் நடக்கும் கதை. ஊரை சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை எதுவுமே உள்ளே நுழையாமல் கட்டி காத்துவரும் ஊர் பெரியவர் ஜேம்ஸ். அவரை எதிர்த்து ஊரை எல்லா வகையிலும் சீரழிக்க நினைக்கிற சேரன் ராஜ், இளம் காதலர்களைப் பிரிக்கவும் நினைக்கிறார். ஊர்ப் பெரியவர் அவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார். இதுதான் கதைச் சுருக்கம்.
சுரேஷ் ரங்கா ஒளிப்பதிவு செய்ய, செளந்தர்யன், லோக பத்மநாபன் இசையமைத்துள்ளனர். பாடல்களை வ.கருப்பன் எழுத, எடிட்டிங் பணிகளை ஆர் செல்வராஜ் கவனித்துள்ளார். ரத்னவேல் நடன இயக்குநராகவு பங்களிக்க, பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக செயல்படுகிறார்.




