HomeGeneral‘சிக்மா' தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளத! -நடிகர் ஷிவ் பண்டிட்

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளத! -நடிகர் ஷிவ் பண்டிட்

Published on

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் என்ற கிரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், ஆக்‌ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் த்ரில்லருக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ஷிவ் பண்டிட் பகிர்ந்து கொண்டதாவது, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு முதன்முதலில் கேமரா முன்பு நின்றேன். ஆனால் நடிப்பு மீதான எனது பயணம் உண்மையில் நான் ஒன்பது வயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. நாடகம், நாடகப் பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பைக் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினே. அந்த அனுபவம்தான் குரல் ஏற்ற இறக்கம் மற்றும் தகவல் தொடர்பு குறித்து எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நான் ஒருபோதும் மெயின்ஸ்ட்ரீம் நடிகராக வருவேன் என்று நினைத்ததில்லை. ஆனால், பிஜாய் நம்பியார் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் தயாரித்த ‘ஷைத்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். அந்தப் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டேன்.
அதன்பிறகு பல திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்தேன். ‘லீலை’தான் எனது முதல் தமிழ் திரைப்படம். அந்தப் படம் வெளியான நேரத்தில் பெரிய அளவில் திரையரங்க வெளியீடு கிடைக்கவில்லை என்றாலும், எனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் அந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைப் பாராட்டினர். இன்றும் ‘லீலை’ திரைப்படத்திற்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால், தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பது உற்சாகமாக உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில், குறிப்பாக ‘லீலை’ மற்றும் நான் நடித்த மற்ற படங்கள் தொடர்பாக என்னைப் பற்றி உருவாகியிருந்த கவனத்தை ஜேசன் சஞ்சய் கவனித்திருக்கிறார். ‘சிக்மா’ படத்தில் என்னை நடிக்க வைப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று அவர் நினைத்துள்ளார். அப்படித்தான் கிரே ஷேட் கொண்ட வின்சென்ட் கதாபாத்திரம் என்னிடம் வந்தது. ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருபவன் வின்செண்ட். தனது நண்பர் எழில் மூலமாக சில சட்டவிரோத நடவடிக்கைகளில் அவன் ஈடுபடுகிறான். இந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் மிகவும் விரும்பி நடித்தேன். ‘சிக்மா’ விறுவிறுப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் திரைப்படம். இதில் நடித்ததில் எனக்கு பெருமை. ஜேசன் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை இந்தப் படத்திற்காக கொடு்த்திருக்கிறார். அவர் ஒரு மிகச் சிறந்த  இயக்குநர் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட! ஜேசன் இப்போது எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். வின்சென்ட் கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.
அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் திரைப்படமான ‘சிக்மா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சஞ்சீவ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள்

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

சென்னை மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது!

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District...

More like this

டோண்ட் டிரபிள் தி டிரபிள்

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...