முழுக்க முழுக்க ஹிப் ஹாப் ஆதியின் உலகமாய் ‘மீசைய முறுக்கு 2.’
ஆதி கானா இசைக் கலைஞர். தனது திறமைக்கான மேடைக்காக அதாவது அங்கீகாரத்துக்காக போராடுகிறார். அவர் மட்டுமல்ல, அவருக்கு முன் அவரது அப்பாவும் தாத்தாவும்கூட அதே அங்கீகாரத்துக்காக போராடியிருக்கிறார்கள் என்கிறது ஃபிளாஷ்பேக்.
அந்த போராட்டங்கள் திறமைக்கான உயரம் கிடைக்காமலிருக்கும் இளைய தலைமுறைக்கு ஊக்கம் தருகிறது.
ஆதி தாத்தா, அப்பா, பேரன் என மூன்று கேரக்டர்களில் போராட்ட குணத்தை கெத்தாக காண்பித்து டான்ஸ், சென்டிமென்ட், ஃபைட் என எல்லா பக்கமும் ரவுண்டு கட்டி அடிக்கிறார்.
ஆதிகளுக்கு ஜோடியாக சைத்ரா ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெதிகா சர்மா என மூன்று பேர் ஜோடிகளாக வந்து உணர்வுபூர்வமாக நடித்து, உற்சாகமாக ஆட்டம்போடுகிறார்கள்.
கருணாஸ், பாபா பாஸ்கர், ஹர்ஷத்கான், யோகிபாபு, ஆடுகளம் நரேன், நாசர் என மற்றவர்களின் நடிப்பு மீட்டரில் அடங்குகிறது.
ஆதியின் இசையில் ஆரா 10க்கு 10, கோயிந்தம்மா, பப்பாளி பழமே பாடல்கள் ஆட்டம் போடத் தூண்டும். பின்னணி இசையை கதையோட்டத்திற்கேற்ற மியூஸிக் கான்செர்ட் போல் வடிவமைத்திருக்கிறார்.
அழுக்கடைந்த பகுதிகளைக் கூட கலர்ஃபுல்லாக காட்ட முடியும் என்பது போலிருக்கிறது பாலாஜி சுப்ரமணியத்தின் கேமரா ஒர்க்.
‘முயன்றால் முடியாதது ஏதுமில்லை’ என்பதை மீசைய முறுக்கி சொன்ன விதம் இளையதலைமுறைக்கு ஊக்க மருந்து புகட்டுவது போலிருக்கும். அதற்காகவே பார்க்கலாம்.
Rating 3.5 / 5

