துரைராசு சாமானிய மனிதன், எளிய விவசாயி. மனைவியையும் தான் வளர்க்கும் ஆட்டையும் தனது விவசாய நிலத்தையும் உயிருக்கு உயிராக நேசிப்பவர். அவரது ஆடு அந்த பகுதியின் மணல் மாபியாவின் லாரியில் அடிபட்டுச் செத்துப் போக, துரைராசு அதற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாட, மணல் மாபியாவால் அவரது உயிருக்கு ஆபத்து. அவருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிளின் உயிருக்கும் ஆபத்து.
இந்த நிலையில் சட்டத்தாலும், துரைராசு வணங்கும் பாண்டிமுனியாலும் என்ன செய்ய முடிந்தது என்பது ஸ்க்ரீன்பிளே…
தனது வயதுக்கும், உடலின் தளர்வுக்கும், இயல்பான கேலி கிண்டல் பேச்சுக்கும் ஏற்ற கேரக்டர் கிடைக்க சுவாரஸ்யமான உடல்மொழியில் துரைராசுவாக புகுந்து விளையாடியிருக்கிறார் கங்கை அமரன்.
கங்கை அமரனுக்கு பாதுகாப்புக்காக அவருடன் சுற்றித் திரியும் கான்ஸ்டபிளாக (நடிகர் திலகம் சிவாஜியின் பேரன்) தர்சன் , நினைத்த எதையும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி, நம்பிக்கைத் துரோகியாகி வேதனைப் படுகிற கதாபாத்திரத்தை ஒகே ரக நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார்.

