HomeCinema‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1...

‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்!

Published on

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’.
உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர்.  மேலும்  ஒரு  எலி முக்கிய பாத்திரமாக  வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நிவின்பாலி மற்றும் தற்போது தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ள நடிகர் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.
அதிலும் கடந்த வருடம் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் 100 கோடியும் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு வெளியான அவரது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் 300 கோடியும் வசூலித்து நிவின்பாலியை ஒரு அசைக்க முடியாத நட்சத்திரமாக மாற்றி உள்ளது. தமிழ் ரசிகர்களிடம் அவருக்கு கிடைத்துள்ள வரவேற்பும் இந்த வசூலுக்கு முக்கிய காரணம்.
அதேபோல இன்னொரு பக்கம் சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் நடிகர் சூரியும் 100 கோடி வசூல் நாயகனாக உயர்ந்துள்ள நிலையில் இந்த இருவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம் பதித்தது போல நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வேஃபாரர் ஃபிலிம்ஸ் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
கடந்த வருடம் துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்ட ‘லோகா சாப்டர் 1′, ‘சந்திரா’ திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில் அவரது வெற்றிக் கரங்களால் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் கேரளாவில் திரையிடப்படுவது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் ஒரு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு உற்சாகத்  திருவிழாவாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஏற்ப கேரளா உட்பட உலகமெங்கும்  வெளியாகிறது.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this