Published on

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு நடித்திருக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,
”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களை என் சொந்த ஊரில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், மக்களுடனும் கொண்டாடுவது வழக்கம். என் ஊரைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு விசேஷ நாட்களில் உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துவதுண்டு.
சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்காகச் செலவழித்திட வேண்டும். அப்படிச் செலவழிக்கவில்லை என்றால், அந்தக் குறிப்பிட்ட பணம் தானாகச் சென்றுவிடும் எனும் எண்ணம் கொண்டவன் நான். அதனால்தான் இன்று வரை நான் சம்பாதிப்பதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மக்களுக்காகச் செலவழித்து வருகிறேன்.
பிரபுதேவா என்னைச் சந்தித்து, ‘ஒரு புது இயக்குநர், ஜாம்பி கதை… கதையைக் கேட்டு வாய்ப்பு தாருங்கள்’ என்று சொன்னார். அந்தக் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்ட பிறகு இயக்குநர் சாம் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுவார் என நம்பினேன். அவர் புது இயக்குநராக இருந்தாலும், அவருக்கான குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் வடிவேலு – பிரபுதேவா ஆகிய இருவரும் எந்தவித மறுப்பும் சொல்லாமல், அனைத்து விஷயங்களிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் நிச்சயமாகப் பேசப்படும்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை இந்தோனேசியாவில் நடத்தலாம் என்ற ஆலோசனையை நான்தான் முதலில் முன்வைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் என்னவெனில், கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காத அந்தத் தீவில் உள்ள எரிமலை, படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் அங்கு சென்றிருந்தபோது வெடித்தது. அதனையும் படக்குழு படமாக்கியுள்ளது. நானும் எரிமலையைப் போலத்தான். எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன். ஏனெனில், நானும் கோபம் – அன்பு – பாசம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட சாதாரண மனிதன்தான்.
இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள். இவர்கள் அனைவரும் படத்தில் தான் சண்டை போட்டார்களே தவிர, படப்பிடிப்புத் தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ஜாம்பி கதையாக இருந்தாலும், அந்தக் கதையை முழுமையாகக் கேட்டபின், டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் கோணத்திலிருந்து சில விஷயங்களைச் சொல்லி, சில திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று சொன்னேன். இயக்குநரும், படக்குழுவினரும் அதை ஏற்றுக்கொண்டு நல்லதொரு படைப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படம் தான் உண்மையிலேயே கூட்டுத் தயாரிப்பு. படம் நன்றாக இருக்கிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, அவரைப் பற்றியும், அவருடைய பின்னணியைப் பற்றியும், அண்மையில் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் எழுந்த ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு உரிய விளக்கத்தை நிதானமாகவும், தெளிவாகவும், உறுதிப்படவும் அளித்தார்.
மேலும், அவரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், அரசியலில் சினிமாவின் சக்தி குறித்தும், தன்னுடைய சொந்தக் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

Latest articles

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ்...

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

 கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்...

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘பித்தன்’ விரைவில் திரைக்கு வருகிறது!

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் 'பித்தன்.' கதாநாயகி புதுமுகம் சினேகா. ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல் சுரேஷ், கல்கி...

சீன் சினிமா விமர்சனம்

சூர்யா போலீஸாக நடிக்கிறார் என்பதால் 'சிங்கம்' போல வில்லன்களை சுளுக்கெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் போனால் அவர் ஷார்ட்ஸ் டீ...

More like this

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ்...

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

 கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்...

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘பித்தன்’ விரைவில் திரைக்கு வருகிறது!

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் 'பித்தன்.' கதாநாயகி புதுமுகம் சினேகா. ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல் சுரேஷ், கல்கி...