தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி சொன்னார் நடிகர் முத்துக்காளை. தான் நடிக்க முயற்சி செய்த போது கிடைக்காத வாய்ப்பு, ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்து, மூன்றாவது படமாக பிரபு நடித்து, எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி, ஸ்டண்ட் சிவா மாஸ்டர் சண்டை காட்சி அமைத்த ‘பொன்மனம்’ திரைப்படம் அடையாளம் காட்டியது.
தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியன், இன்று தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் உறுப்பினராக சேர்த்து கொண்டதற்கு நன்றி சொன்னார் முத்துக்காளை. தற்போது வாசன் முரளி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

