HomeGeneralஉற்சாகமாக நடைபெற்ற 'இம்மார்டல்' படத்தின் வெற்றி விழா! -நாயகன் ஜி வி பிரகாஷுக்கு RX100 பைக்...

உற்சாகமாக நடைபெற்ற ‘இம்மார்டல்’ படத்தின் வெற்றி விழா! -நாயகன் ஜி வி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்

Published on

ஜி வி பிரகாஷ் – கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 -ம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘இம்மார்டல்.’
இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,
எனது முதல் படமான ‘இம்மார்டல்’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய ஆதரவு வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி. ஒரு அறிமுக இயக்குநராக எனக்கு கிடைத்த இந்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், ஸ்டண்ட் குழுவினர், VFX மேற்பார்வையாளர் மஹி, கோபி பிரசன்னா, மிக்ஸிங் பணிகளை மேற்கொண்ட ஷிவா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கும் பயணத்தில் பலரும் எனக்கு உதவினார்கள், “இம்மார்டல்” படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், நேர்மறையான விமர்சனங்களையும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. “இம்மார்டல்” டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக செய்த சக்தி சாருக்கு நன்றி.
இந்தப் படத்தை என்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்தார். அவருடைய அந்தப் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
அதேபோல், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா சார் மற்றும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,
“‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. அது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பேசி வந்தேன். அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டும் போதாது. அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும், நேர்மறையான எனர்ஜியும் முக்கியம்.
இந்தப் படத்திற்காக அதிக நேரத்தையும் பொறுமையையும் செலவிட்டு பணியாற்றிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு நன்றி. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

Latest articles

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

டிரெய்லர் இல்லாமல் படத்தை வெளியிடும் புதிய முயற்சி… செப்டம்பர் 24-இல் வெளியாகிறது நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்.’

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம்...

More like this