HomeGeneral7 ஸ்டார் பாய்ஸ் சினிமா விமர்சனம்

7 ஸ்டார் பாய்ஸ் சினிமா விமர்சனம்

Published on

ஒன்பது வயது சிறுவன் ஒருவனின் கால்பந்தாட்டம் மீதான ஆர்வம் என்னவெல்லாம் செய்கிறது என்பது கதை.

கேரளாவில் ஆத்தங்கரை என்ற கிராமத்தில் சிறுவன் உமருடன் சேர்த்து 7 சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு அதிகம். கிடைத்த பந்தையும் மைதானத்தையும் வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுகிறார்கள். அந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை உள்ளூரில் நடக்கும் டோர்னமெண்டில் பங்கேற்கச் செய்யும் விதமாக மூன்று பேர் கொண்ட இளைஞர் கூட்டணி உதவுகிறது.

நல்ல விஷயங்களை யாராவது முன்னெடுத்துச் செய்தால் அது சிலருக்கு பிடிக்காமல் போவதும் அவர்களால் பிரச்சனை உருவாவதும் காலம் காலமாக நடப்பது. உமர் உள்ளிட்ட சிறுவர் அணிக்கும் அப்படியான பிரச்சனைகள் உருவாக, அவர்களால் டோர்னமெண்டில் விளையாட முடிந்ததா? வெற்றிக் கோப்பையை தட்டித் தூக்க முடிந்ததா? என்பது நிகில் பிரேம்ராஜ் இயக்கியிருக்கும்  7 ஸ்டார் பாய்ஸின் ஸ்க்ரீன்பிளே.

சிறுவன் உமராக தனிஷ் பி.கே. மெஸ்ஸியின் தீவிர ரசிகனாக, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிப்பதை குறிக்கோளாக கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுபவனாக, சோகம் ஏக்கம் உற்சாகம் என உணர்வுகளை அழகான உடல்மொழியில் வெளிப்படுத்துபவனாக நடிப்பு அசத்துகிறது. தனிஷுடன் குழுவாக இணைந்து களம் காணும் மற்ற ஆறு சிறுவர்கள் இலக்கை குறிவைத்து முன்னேறுகிறவர்களாக கவனம் பெறுகிறார்கள். அந்த வயதுக்கேயுரிய இயல்புபடி நடந்து கொள்கிற காட்சிகளில் தனித்துவம் தெரிகிறது.

சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் மூவர் குழுவின் முதன்மையானவராக ஆண்டனி வர்க்கீஸின் எனர்ஜிடிக்கான நடிப்பு, அவருக்கு ஜோடியாக ஒருசில தருணங்களில் வந்துபோகிற ஜுமானா அப்து ரஹ்மானின் எளிமையான நடிப்பு… கூடவே இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சர்வதேச கால்பந்து சாம்பியன் ஐ எம் விஜயன் சிறுவர்களுக்கு கோச்சாக வருவது படத்திற்கு மைலைஜை கூட்டுகிறது.

ஜேக்ஸ் பிஜாய் கதையின் நகர்வுக்கு அதிர்வலையை உருவாக்கும் விதத்தில் பின்னணி இசையமைத்து, பாடல்களை ரசிக்க வைக்கிறார். நிஜ கால்பந்து விளையாட்டுப் போட்டியை பார்ப்பது போன்ற உணர்வு தரும் தரமான காட்சிகளை தன் ஒளிப்பதிவால் கூடுதல் தரமாக்கியிருக்கிறார் ஃபயஸ் சித்திக்.

‘போட்டிகளில் கிடைக்கிற தோல்வியால் மனம் உடையக் கூடாது’ என்பதை சிறுவர் சிறுமிகள் மனதில் படும்படி எடுத்துச் சொல்லியிருக்கிற இந்த படம் பிள்ளைகளோடு பெற்றோர் பார்க்க வேண்டிய படைப்பு. வெறுமனே கமர்சியல் அம்சங்களை கட்டிக்கொண்டு அழாமல் கதைக்கு முக்கியத்துவம் தந்து ஜெயிக்கிற மலையாளப் படங்கள் எப்போதுமே ஆச்சரியம் தருபவை. அந்த ஆச்சரியத்தை இந்த படமும் தருவது உறுதி!

Rating 3.5 / 5 

Latest articles

ரசிகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் மேடையேறும் ‘விக்கல்ஸ் ஆஃப் விக்ரம்.’

மேடை உலகில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து ரசிகர்களை புன்னகை புரிய வைப்பதுடன் பிரச்சனைகளை புதிய கோணத்தில் பார்க்கலாமே..!...

அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பில் நடந்த கட்டாகுஸ்தி திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி...

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்!

கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும்...

தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம் ‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது!

‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை...

More like this