HomeGeneralகதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்த ‘துரோகம் பழகு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்த ‘துரோகம் பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்க, சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு.’

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் எஸ்.வி. சேகர், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா ஸ்வேதா, அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.

படம் துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.

‘சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…’ என்ற அழுத்தமான ஒன் லைனுடன் வெளியாகியுள்ள முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

படத்தில் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக  இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.

Latest articles

செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில் ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ்!

இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என...

அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்… Sikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட Top 100 Tamil Leaders in Arabia.

உலகின் பல்வேறு துறைகளில் தமிழர்கள் தங்களின் திறமையாலும் உழைப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் நிலையில், அரேபிய நாடுகளில்...

‘யானை மரம்’ திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! -பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு இயக்குநர் பேரரசு  கோரிக்கை

'யானை மரம்' என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத...

தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை  பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத்...

More like this