HomeGeneral'யானை மரம்' திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! -பள்ளி...

‘யானை மரம்’ திரைப்படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! -பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு இயக்குநர் பேரரசு  கோரிக்கை

Published on

‘யானை மரம்’ என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு.
இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார்.
யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனிதநேயத்தையும் இட்டிருக்கிறார்.
முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு.
தமிழக அரசு இப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார்!
தேசிய விருதுக்கு அனுப்ப கூடிய படம் ‘யானை மரம்’ என்று, படம் பார்த்த இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான்.
பரமு, அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும் யானை மரத்திற்கும் உண்டான நட்பு என்ன ஆனது? என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் இந்த கதையில் வாழ்ந்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, ஒளிப்பதிவு தமிழ் மாறன், கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர் கோவிந்தராஜ், ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார்.
இதுவரை 20 சர்வதேச விருதுகள் இப்படம் பெற்றுள்ளது. உலக நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்று வருகிறது. விரைவில் திரைக்கும் வருகிறது ‘யானை மரம்’!

Latest articles

கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்த ‘துரோகம் பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தக்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்க, சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு.' மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula...

செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில் ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ்!

இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என...

அரேபிய மண்ணில் தமிழர்களின் சாதனை சரித்திரம்… Sikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட Top 100 Tamil Leaders in Arabia.

உலகின் பல்வேறு துறைகளில் தமிழர்கள் தங்களின் திறமையாலும் உழைப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் நிலையில், அரேபிய நாடுகளில்...

தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கியிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை  பெற்றது ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத்...

More like this