HomeMovie Reviewஹாய் சினிமா விமர்சனம்

ஹாய் சினிமா விமர்சனம்

Published on

1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம். ஒரு பொய் சொல்லி காதலிக்கக் கூடாதா?

சொல்லிப் பார்ப்போம் என்று, இந்த கதையின் நாயகன் தான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண்ணைப் பற்றி சொல்லக்கூடாத பொய்யைச் சொல்கிறார். அதனால் சிலபல பிரச்சனைகள் வெடிக்கிறது. பிரச்சனை என ஒன்று இருந்தால் கண்டிப்பாக தீர்வும் இருக்கும்.

இந்த பிரச்சனையில் தீர்வு ஹேப்பி என்டிங்காக இருக்கிறது. அது எப்படி என்பதை சுவாரஸ்யமான காட்சிகளில், காமெடி கலகலப்புடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன்.

தொடர் காதல் தோல்வியால் விரக்தி, அடுத்து ஒரு பெண் தன் வாழ்வில் நுழைந்ததில் உற்சாகம், அந்த பெண்ணை அடைவதற்காக பின் விளைவுகளை யோசிக்காமல் அவிழ்த்து விடும் பொய் என காட்சிகளில் பொருந்தி நடித்திருக்கிறார் நாயகன் கவின்.

கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. வயது ரீதியாக ஜோடிப் பொருத்தம் அப்படி இப்படி இருந்தாலும் கெமிஸ்ட்ரி’யில் குறையில்லை. கதையின் தன்மை புரிந்து சீனியர் நடிகை என்ற எந்த அலட்டலும் நடிப்பில் தெரியாதபடி களமாடியிருக்கிறார்.

கவினுக்கு அப்பாவாக வருகிற இயக்குநர் கே பாக்யராஜுக்கு வைத்திருக்கிற ‘அந்த’ மாதிரியான காமெடி சீனுக்கு சற்றே அதிகமாய் சிரிப்பு வருகிறது.

இளைய திலகம் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், காவ்யா அறிவுமணி, அம்ருதா, ஆதித்யா கதிர் என பலரது கேரக்டரும் நடிப்பும் அசத்தல் ரகம்.

ஜென் மார்ட்டின் இசையில் அனிருத், ஜி வி பிரகாஷ் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் கேட்க, பாடல் காட்சிகளைப் பார்க்க உற்சாகம் பிறக்கிறது. பின்னணி இசை நேர்த்தி. ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு காட்சிகளில் இருக்கும் பிரெஷ்னஸை கூடுதலாக்குகிறது.

குற்றம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிலான ஒரு பொய்யும் அதன் விளைவுகளுமாய் பயணிக்கும் சீரியஸான கதைக்கு எழுதப்பட்டிருக்கும் சிரித்து ரசிக்கும்படியான திரைக்கதையால் படம் ஃபீல் குட் உணர்வைத் தருகிறது. கவினுக்கு கம் பேக்’காக அமைகிறது.

Rating 3.5 / 5

Latest articles

டாக்ஸிக் சினிமா விமர்சனம்

வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ் படம் முழுக்க வயலனஸ். ஏன்? எதற்காக? 1947 காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள் வசமிருக்கும் கோவாவை ஆளத் துடிக்கும் கேங்ஸ்டர்...

பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில கேள்விகளுடன் வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்! -நோவா படம் பற்றி இயக்குநர்...

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி”...

https://www.youtube.com/watch?v=_L9uf9Ulubw https://www.youtube.com/watch?v=hjKu8iFYftM   என் மனமே – ஒரு இசைப் பயணம் சமூக வலைதளத்திற்காக தற்செயலாக எழுதப்பட்ட முதல் பார்வைக் காதல் பற்றிய ஒரு...

சிலம்பரசன் TR நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு...

More like this