HomeMovie Reviewடாக்ஸிக் சினிமா விமர்சனம்

டாக்ஸிக் சினிமா விமர்சனம்

Published on

வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ் படம் முழுக்க வயலனஸ்.

ஏன்? எதற்காக?

1947 காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள் வசமிருக்கும் கோவாவை ஆளத் துடிக்கும் கேங்ஸ்டர் அண்ணன் – தங்கை. அவர்களை எதிர்ப்பவர்கள் என்னவாகிறார்கள் என்பதும், அவர்களால் கோவாவை ஆள்கிற நிலைக்கு உயர முடிந்ததா இல்லையா என்பதுமே குத்து மதிப்பாக புரிந்து கொள்ள முடிகிற டாக்ஸிக்கின் படு சிக்கலான ஸ்க்ரீன்பிளே. இயக்கம் கீது மோகன்தாஸ்

நாயகன் யஷ்ஷுக்கு டூயல் ரோல். ஒருவர் நல்லவர், இன்னொருவர் கெட்டவர் என்றெல்லாம் கிடையாது. இருவருமே முரட்டுத்தனமான உடம்பும் தோற்றமும் கொண்ட கேங்ஸ்டர்கள். ஏகப்பட்ட பேரை இருவருமே விதவிதமாக கொடூரமாக கொன்று குவிக்கிறார்கள். ஹீரோயின்களுடன் உடற்பசியை தீர்த்துக் கொள்வதை ரசித்துச் செய்கிறார்கள். அதைத் தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை.

யஷ்ஷுக்கு அக்காவாக நயன்தாரா. உடையும், ஹேர் ஸ்டைலும் அவரை வித்தியாசமாக காட்டுகிறது. தம்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவராக வருகிற அவரும் கேங்ஸ்டர் என்பதால் தன் பங்கிற்கு பலரையும் கொன்று குவிக்கிறார்.

ஹீரோயின்கள் கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் கவர்ச்சியை அதிகமாகவும் நடிப்பை கொஞ்சமாகவும் காட்டுகிறார்கள்.

தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, அக்சய் ஓபராய் என மற்ற கேரக்டர்களில் வருகிற நடிகர் நடிகைகளின் லிஸ்ட் ரொம்பவே பெரியது. நடிப்பில் குறையில்லை.

ரவி பஸ்ருரின் பின்னணி இசை காட்சிகளுக்கு பரபரப்பு கூட்ட உதவுகிறது.

காடு, மலை, வறட்சியான ஏரியா, பனி படர்ந்த பகுதி என ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதை நிகழ்விடங்களை ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிறது.

இந்த படத்துக்கு 500 கோடி செலவாம். மேக்கிங்காக பார்த்தால் தரம்தான்; பிரமாண்டம்தான்.  உருப்படியான கதையில்லாததால், வன்முறை – போதை – காமம் என திரைக்கதை ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழல்வதால் யஷ்ஷுக்கு ‘கே ஜி எஃப்’, ‘கே ஜி எஃப் 2’ படங்களைத் தொடர்ந்து கிடைத்திருக்க வேண்டிய ஹாட்ரிக் வெற்றி மிஸ்ஸாகியிருக்கிறது.

Rating 2 / 5

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this