நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை சந்திக்கிறார்; காதல் மலர்கிறது. லீலா ‘என்னை மாலை 6 மணிக்கு மேல் பார்க்க முடியாது’ என்கிறாள். அதன் பின்னணியில் அதிர வைக்கும் விஷயமிருக்கிறது. அது என்ன, காதலர்கள் மண வாழ்க்கையில் இணைகிறார்களா இல்லையா என்பது ஸ்க்ரீன்பிளே… இயக்கம் ராமச்சந்திரன் கண்ணன்
ராமாக துடிப்பாக நடிக்கக்கூடிய ரியோ ராஜ். அவருக்கேற்ற கதை. பொருந்தி நடித்திருக்கிறார்.
லீலாவாக அறிமுக நடிகை வர்த்திகா ஜெயின். எளிமையாக நடித்திருக்கிறார். ராமுக்கும் அவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி அசத்துகிறது. முனிஷ்காந்த், மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் காமெடி கலகலப்புக்கு உதவியிருக்கிறார்கள்.
ஜாலியான ஃபேண்டஸி காதல் கதைக்கு பொருத்தமாக இருக்கிறது பின்னணி இசையும் பாடல்களும். ஒளிப்பதிவு நேர்த்தி.
ஏலியன் அது இதுவென சுற்றிச் சுழலும் இன்ட்ரெஸ்டிங்கான கதைக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். சில காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்புக்காகவும் நகைச்சுவைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.
Rating 3 / 5 

