HomeGeneralஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'ONE MAN' திரைப்படம்

ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

Published on

உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் ONE MAN திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.
ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு இணையாகப் படமாக்கப்பட்டுள்ளன.
சிறப்புக் காட்சியில் படத்தைப் பார்த்த திரைத்துறை பிரமுகர்கள், தனி மனித உழைப்பையும் தாண்டி, இதன் கதையும், திரைக்கதையும், காட்சி அமைப்பும் சுவாரசியமானதாகவும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் பார்க்கும் விதத்திலும் இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.
படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருந்தாலும், படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனி கதாபாத்திரங்களாகவே மனதில் தோன்றுகிறார்கள். இவனிடம் இருந்து அவன் எப்படி தப்பிப்பான், அவனால் இவனுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் வகையில் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக அமைந்துள்ளதாகவும், அதை ஒரே மனிதனாக இருந்து நிகழ்த்தியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் எப்படி எடுத்தேன் என்பதை வேறு ஒரு கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து வைத்திருப்பது மேலும் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போலவே, ஒரு தனி மனிதனாகவும், தமிழனாகவும் தான் செய்த இந்தப் பெரும் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும், வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி ONE MAN திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Latest articles

படத்திற்கு சில சிக்கல்கள் இருக்கிறது. அதைத்தாண்டி படம் வெளிவரும்! -மகுடம் பட விழாவில் நடிகர் விஷால்

விஷால் இயக்கி நடித்திருக்கும் மகுடம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர் விஷால் பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம்....

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

More like this