HomeGeneralதிரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்த 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்த ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Published on

திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘ஓ! சுகுமாரி’ திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். ‘ஓ! சுகுமாரி ‘ படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையமாகும்.

இயக்குநர் பரத் தர்ஷன் உணர்ச்சிகளுக்கு குறைவில்லாமல் அதே சமயம் மிகுந்த நகைச்சுவையுடன் இந்த கதையை வழங்கியுள்ளார். திரு வீர் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கவலையற்ற கிராமத்து இளைஞராக தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக ஜொலிக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான அழகையும், ஆழத்தையும் அவர் திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட் , விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த ‘ஓ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. ‘ஓ! சுகுமாரி’ ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் C.H. குஷேந்தர் – கிராமத்து பின்னணியிலான அழகியல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு – தனது துடிப்பான இசையின் மூலம் இந்த கலகலப்பான கதை களத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக திருமலா எம். திருப்பதி பணியாற்ற, படத் தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் கையாளுகிறார்.

Latest articles

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

என்ன விலை திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் நடிக்கத் தயாரானது எப்படி? -நடிகை நிமிஷா சஜயன் 

இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத்...

More like this

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...