HomeCinemaஇதயம் முரளி சினிமா விமர்சனம்

இதயம் முரளி சினிமா விமர்சனம்

Published on

காதலிக்கத் தெரியும், ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் காதலை சொல்லத் தெரியாது. அப்படியொரு இயல்பு கொண்டவன் இதயா. அவன் தனக்கு திருமணத்திற்கு ஏற்பாடாகியிருக்கும் சூழ்நிலையில் முன்பு யாரையெல்லாம் காதலித்தானோ அவர்களையெல்லாம் சந்திக்கிற சந்தர்ப்பம் அமைகிறது. மனதில் தடுமாற்றம் உருவாகிறது. அதையெல்லாம் தாண்டி அவன் யாரை கல்யாணம் செய்து கொள்கிறான் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.

இதயாவாக அதர்வா. காதலிப்பதும் காதலைச் சொல்லத் தயங்குவதுமாய் உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் நடிப்பதற்கு அதிகம் சிரமப்பட தேவையில்லை என்று சொல்வது போலிருக்கிறது அவரது இயல்பான நடிப்பு. ஸ்பெஷலாக சொல்ல ஏதுமில்லை.

அதர்வாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய்த் தயாராக இருக்கிற தாய்மாமாவாக நட்டி நட்ராஜ். தூக்கி வைத்துக் கொண்டாடும்படியான கேரக்டர். அதன் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார்.

காதலிகளாக கயாது லோகரும் பிரீத்தி முகுந்தனும் அழகாக வசீகரப் புன்னகையுடன் வலம் வருகிறார்கள். அழகையும் தாண்டி நடிப்பால் கவனிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பகத் பாசிலுக்கு ஜாலியான கெஸ்ட் ரோல். அதை பெஸ்டாக செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம், இன்ஸ்டா நிஹாரிகா, ரக்‌ஷன் என சோஷியல் மீடியா பர்சனாலிடிகள் அதிகம் தென்படுகிறார்கள். எல்லோருக்குமே வேலையிருக்கிறது.

‘வாம்மா வாம்மா’,’ தங்கமே தங்கமே’ என வரிசைகட்டும் பாடல்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் இசையமைத்திருக்கும் தமன், ஹீரோவுக்கு நண்பனாக படம் முழுக்க பயணித்திருக்கிறார். பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு போதுமான அளவிலிருக்கிறது.

இயக்குநரே படத்தை தயாரித்திருக்கிறார்; அவர் காட்சிகளை பிரமாண்ட செலவில் எடுக்க வேண்டும் என தீர்மானித்து களமிறங்க அதை புரிந்துகொண்டு ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா, சி எச் சாய் இருவருமாக கேமராவை திருச்சியிலிருந்து நியூயார்க் வரை சுழல விட்டிருக்கிறார்கள்.

எடிட்டருக்கு சுதந்திரம் கொடுக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை; கிரிஞ்சான பல காட்சிகளை சுமந்துகொண்டு படம் 166 நிமிடங்கள் ஓடுகிறது.

காதலிக்கிறீர்களா, எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என ஏற்கனவே பல படங்கள் சொன்ன அதே கருத்து இந்த படத்திலும் இருக்கிறது. சிலபல சுவாரஸ்யங்களும் இருக்கிறது. எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக் கொள்ளாமல் போனால் ஜாலியாக ஒரு முறை பார்க்கலாம்.

Rating 3 / 5

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this