HomeGeneralவில்லுப்பாட்டு மாதவி இப்போ சினிமா பாடகி! 'வேட்ட சாமி' படத்தில் ஜிப்ரான் இசையில் அறிமுகம்!

வில்லுப்பாட்டு மாதவி இப்போ சினிமா பாடகி! ‘வேட்ட சாமி’ படத்தில் ஜிப்ரான் இசையில் அறிமுகம்!

Published on

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர்.
தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையில் அவர் பாடிய ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ பாடல், சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில், அருள்நிதி – அமீர் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வீரமும் தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதைக்கருவுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை, ‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொண்டு வருகிறார். சண்டைக் காட்சிகளை, சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடியுள்ள தகவலை, மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.

Latest articles

நடிகர் பாவா லட்சுமணனுக்கு கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு… அள்ளிக் கொடுத்த லெஜன்ட் சரவணன்!

நடிகர் பாவா லட்சுமணனுக்கு வாக்கு கொடுத்தப்படி, வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் இலவசமாக கொடுத்தார் லெஜன்ட் சரவணன். முன்னதாக வீடு...

ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் RAPO23

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக...

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்!

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப்...

More like this