HomeGeneral‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

Published on

Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music  கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.
டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music  கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.
மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக, ஜூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கினர். டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம், “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்று பதிவிட்டு கியாரா அத்வானி-யை குறிப்பிட்டது. அதற்கு கியாரா ஒரு வார்த்தையில் “தபாஹி” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து ஜீ மியூசிக் கம்பெனி, அவரது பதிலை மேற்கோள் காட்டி “Stay Tuned…” என்று பதிவிட்டது. இந்த சுவாரஸ்யமான சமூக வலைதள பரிமாற்றம், அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களான யோகராஜ் பட் (கன்னடம்), ராமஜோகைய்யா சாஸ்திரி (தெலுங்கு), விக்னேஷ் சிவன் (தமிழ்), மற்றும் ரஃபீக் அகமது (மலையாளம்) ஆகியோர் தங்களது மொழிகளில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இது டாக்ஸிக் திரைப்படத்தின் உண்மையான பான்-இந்திய படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், ஜீ மியூசிக் கம்பெனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியாக நாடு முழுவதும் இசை வெளியீட்டை முன்னெடுத்து வருகிறது.
இந்த திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.
பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறியதாவது: ”‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது சிதைவாகவும், முழுமையான சரணாகதியாகவும், அனுமதி கேட்காமல் எரியும் நெருப்பாகவும் இருக்கும் காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படம் அதே தீவிரத்தை தாங்கும் இசையை வேண்டியது—ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும். யாஷ் பாய் திரையில் வெளிப்படுத்தும் உறுதியை இசையிலும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பதிவு செய்ய முயன்றேன். எனக்கு ‘தபாஹி’ என்பது காதலின் வடிகட்டப்படாத, கட்டுப்படுத்த முடியாத துடிப்பைத் தேடும் ஒரு இசைப் பயணம். ஆறுதல் அளிப்பதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் உணர்வே இந்தப் பாடலின் மையம்.”
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள டாக்ஸிக், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

சிலம்பரசன் TR நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு...

அமரம் சினிமா விமர்சனம்

கொலை செய்வதை தொழிலாக கொண்டவன் அருகன். அவன் ஒரு எழுத்தாளரைக் கொலை செய்துவிட, எழுத்தாளரின் மகள் அவனை கொல்ல...

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=taPTp_psBeY பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள்...

More like this

சிலம்பரசன் TR நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு...

அமரம் சினிமா விமர்சனம்

கொலை செய்வதை தொழிலாக கொண்டவன் அருகன். அவன் ஒரு எழுத்தாளரைக் கொலை செய்துவிட, எழுத்தாளரின் மகள் அவனை கொல்ல...