HomeMovie Reviewஅந்தரன் சினிமா விமர்சனம்

அந்தரன் சினிமா விமர்சனம்

Published on

தொடர் மரணங்கள் நடக்கிற திக்திக் திரில்லராக ‘அந்தரன்.’

நாயகியை திருமணம் செய்துகொள்ளத் தயாராகிற இளைஞர்கள் ஒவ்வொரு விதமாக இறக்கிறார்கள். அதற்கெல்லாம் தன் தந்தைதான் காரணமாக இருப்பார் என நம்பும் நாயகி போலீஸில் புகார் கொடுக்கிறார்.

குற்றம் நடந்தது என்ன என்பதை விசாரிக்க வருபவர், நாயகியை பள்ளிப் பருவ வயதில் காதலித்து, பிரிந்து போனவர். இப்போது அவரும் கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

நடக்கிற மரணங்களையெல்லாம் பார்க்கும்போது அவரது உயிர் பறிபோய்விடுமோ என்ற பதற்றம் தொற்றுகிறது… இயக்கம் சந்தோஷ் ராகவன்

நாயகி இவானா. அழகாக இருக்கிறார். கதைக்குத் தேவையான மீட்டருக்குள் நடிக்க வருகிறது. தன்னை ஆணாக நினைத்துக் கொள்ளும் தருணங்களில் காட்டியிருக்கும் உடல்மொழி ஆஹா ரகம்.

காவல்துறை விசாரணை அதிகாரியாக பிரஜன். பல படங்களில் பார்த்தது போன்ற அதே ஸ்டைல் விசாரிப்புகள், அலசல்கள், ஆராய்ச்சிகள்… நடிப்பில் தன்னால் முடிந்தளவு கம்பீரம் காட்டியிருக்கிறார்.

அனுபமா குமார், செந்தி குமாரி, அறிமுக நடிகை இன்ஸ்டா பிரபலம் ஐஸ்வர்யா கண்ணன், ஆதிரன், தண்டபாணி, சாம்பசிவம் உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.

இசையமைப்பாளர் ஹரி எஸ். ஆர், ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், படத்தொகுப்பாளர் இக்னேஷியஸ் அஸ்வின் மூவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள்.
குறைகள் சில இருந்தாலும்  அதையெல்லாம் தாண்டி பிளாஷ்பேக் காட்சிகளில் அடடே என்று சொல்லும்படியான விஷயங்கள் கலந்திருப்பது, கொலைகளைச் செய்வது யார் என்பதை தெரியப்படுத்தும்போது உருவாகிற ஆச்சரியம் படத்தின் தனித்துவம்.
கிளைமாக்ஸின் நெருக்கத்திலிருக்கும் பரபரப்புக்காக ஒரு முறை பார்க்கலாம்.
Rating 3 / 5

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this