HomeCinemaடபுள் ஆக்குபன்சி சினிமா விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி சினிமா விமர்சனம்

Published on

ஒரு உடலில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர். அந்த இரண்டு பேர் வாழ்விலும் காதல் நுழைகிறது. அதனால் இருவரின் நிம்மதியும் பறிபோகிறது.

இப்படி ஆச்சரியப்படுத்தும் விதமாக கதை துவங்கி பறிபோன நிம்மதி மீண்டும் கிடைத்ததா? காதல் கல்யாணத்தில் முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில்களாக விரிகிறது திரைக்கதை…

கதைநாயகன், கதைநாயகி என இருவருக்கும் ஒரே கதாபாத்திரப் பெயர் ரஜினி. ஆண் ரஜினியாக வருகிற சந்தோஷ் காதல் காட்சிகளில் சந்தோஷத்தில் பொங்குவதாகட்டும், காதலி தவறாக புரிந்து கொண்டு பிரச்சனை கிளப்பும்போது அவளுக்கு நடக்கும் சம்பவங்களை புரிய வைக்க முடியாமல் திணறுவதாகட்டும் உணர்வுகளில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சண்டைக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

பெண் ரஜினியாக வருகிற ரேஷ்மா வெங்கடேஷுக்கு எல்லாவித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வேலை. தன் காதலியின் பாலின மாறுதல் பிரச்சனையை நேரில் கண்டு மிரள்கிற வேலை வினோத் கிஷனுக்கு. தன் காதலனின் பாலின மாறுதல் பிரச்சனை தெரிந்து இதெல்லாம் சாத்தியமா, சாமர்த்திய ஏமாற்றுதலா என குழப்பத்தில் விழுகிற வேலை சம்யுக்தா விஸ்வநாதனுக்கு… அவரவர் தங்களின் கதாபாத்திரத்தின் நீள அகலம் தெரிந்து பயணித்திருக்கிறார்கள்.

விடிவி கணேஷின் பாடி லாங்வேஜுக்கேற்ற காட்சிகளும் வசனங்களும் நிரம்பியிருக்க, பக்ஸ் பகவதி பெருமாள், விச்சு என மற்ற நடிகர் நடிகைகள் குறை சொல்ல முடியாத அளவில் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது.

சாந்தகுமார் சக்கரவர்த்தி பேண்டஸி கதைக்களத்துக்கு பொருத்தமான வண்ணமயமான ஒளிப்பதிவைத் தர, சாம்.சி.எஸ் பாடல்களையும் பின்னணி இசையையும் போதுமான அளவில் கலந்திருக்கிறார்.

மரபணுக் கோளாறையும் அன்மிகத்தையும் இணைத்து ஒரு இதயமும் இரு பாலின மனிதர்களும் என  என கதை மனம்போன போக்கில் ஒரு கதையை யோசித்து, சுவாரஸ்யமும் காமெடியுமாக திரைக்கதைக்கு பாதை போட்டு ஆடியன்ஸுக்கு கணிசமான திருப்தியை அள்ளிக் கொடுக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி.

Rating 3.5 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this