HomeCinemaசாருகேசி சினிமா விமர்சனம்

சாருகேசி சினிமா விமர்சனம்

Published on

ஒய் ஜி மகேந்திரன் நடித்து மேடை நாடக வடிவில் ஹிட்டான சாருகேசி, மெகா ஹிட் படங்களின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏற்றம் கண்டிருக்கிறது.

நாடறிந்த இசைமேதை, வாய்ப்பாட்டுக் கலைஞர் சாருகேசி மனைவியோடும் மனைவியின் மகனோடும் (பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்) மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார் அவரது மகன். அது போதாதென்று மகன் கட்டிக் கூட்டிவந்த பெண் கரடு முரடான கற்களை அள்ளிப் போடுகிறார். அதுவும் போதாதென்று அல்சைமரும் சேர்ந்து கொண்டு சாருகேசியை ஆட்டிப் படைக்கிறது.

மகனும் மருமகளும் பிரச்சனையாக உருவானதன் பின்னணி, பிரச்சனைகளிலிருந்து சாருகேசியால் மீண்டு வர முடிந்ததா இல்லையா என்பதே திரைக்கதை…

சாருகேசியாக ஒய் ஜி மகேந்திரன். எண்ணங்களாலும் செயல்களாலும் உன்னதமான கேரக்டர். சற்றே மிகைப்படுத்திய நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார். மனைவியாக சுஹாசினி தோற்றத்தாலும் நடிப்பாலும் நல்ல பொருத்தம்.

மகனாக ராஜ் அய்யப்பா, ஆரம்பத்தில் கடுகடு முகம் காட்டி தந்தை பற்றி தெரிந்துகொண்ட பின் கருணையின் வடிவாக மாறுகிறார். அவரது நகலாக ஒரு கட்டம் வரை சாருகேசியை பழி வாங்கும் வேலையை அளவான வில்லத்தனத்தில் செய்து, பின்னர் அப்படியே மாறி கனிவு காட்டுகிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

சத்யராஜ் மனித வடிவில் கடவுளாக வந்து கவனம் பெறுகிறார். தலைவாசல் விஜய், சமுத்திரகனி, ஜெயப்பிரகாஷ் என மற்றவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்க, தேனிசைத் தேவாவின் இசையில் பாடல்கள் பரவசமூட்டுகிறது. பின்னணி இசையும் நிறைவு. பி எல் சஞ்சயின் ஒளிப்பதிவு நேர்த்தி.

மனிதர்களில் மகான் என்கிற லெவலில் வாழ்க்கை பாதையில் பயணிக்கிற ஒரு கலைஞனை சோதனைகள் சுனாமியாய் சூழ்வதும், அதையெல்லாம் தாண்டி அந்த கலைஞன் இசையுலத்துக்கு மகத்தான படைப்பை வழங்கி வாழ்வை நிறைவு செய்வதுமாக சிலிர்ப்பூட்டும் கதை படத்தின் பலம். சினிமாவாக தயாரான பின்னும் நாடகமாகவே இருப்பது பலவீனம்.

Rating 2.5 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this