HomeCinemaஹபீபி சினிமா விமர்சனம்

ஹபீபி சினிமா விமர்சனம்

Published on

இஸ்லாமிய இளைஞன் அபுதாகிர் இஸ்லாமியப் பெண் நிலோபரை காதலிக்கிறான். அபு தாகிரின் குடும்ப வறுமைச் சூழலால் காதல் கல்யாணத்தில் முடிய வாய்ப்பில்லாமல் போகிறது. அபு வெளிநாடு சென்று வேலை பார்த்து, பணம் சம்பாதித்து திரும்புகிறான். அதன்பிறகு அபு – நிலோபர் ஜோடி கணவன் மனைவியாக முடிந்ததா இல்லையா என்பது மீதிக்கதை…

அபு தாகிராக புதுமுகம் ஈஸா. வயதுக்கேற்ப உடல் அளவில் ஏற்ற இறக்கங்களுடன் வருபவர், காதல், இயலாமை, விரக்தி, உற்சாகம் என பல்வேறு உணர்வுகளை ஓகே ரகமாக பிரதிபலித்திருக்கிறார். மாளவிகா மனோஜ் காதலியாக சில காட்சிகளில் மட்டும் வந்து ஏற்றுக் கொண்ட கேரக்டருக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் அப்பாவாக இயக்குநர் கஸ்தூரி ராஜா. தங்களின் பாரம்பரிய தறி தொழில் நலிவடைந்த பிறகு அதை விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறவராக, வறுமைச் சூழலால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் படுகிற கஷ்டங்களைப் பார்த்து வேதனைப் படுகிறவராக நடிப்பில் குறை வைக்கவில்லை.

கதாநாயகனின் குடும்பத்தினர், கதாநாயகன் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினர், கதாநாயகனுக்கு நிச்சயம் செய்யப்படுகிற பெண் – அவரது குடும்பத்தினர், கதாநாயகனின் அப்பாவுன் உயிருக்கு உயிரான இந்து மதத்தைச் சேர்ந்தவர் என படத்தில் வருகிற அத்தனை பேரும் நல்ல தேர்வு. நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்கள்.

சாம் சி எஸ் கதையின் போக்குக்கு உயிரூட்டும் விதமாக இசையமைத்து, பாடல்களால் இதமூட்டுகிறார். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் தரம் அதிகம்.

இயக்குநர் மீரா கதிரவன் எந்தவொரு புதுமையுமில்லாத காதல் கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா உட்பட முழுக்க  முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை அங்குலம் அங்குலமாக எடுத்துக் காட்டி ‘ஹபீபி’யை தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாக்கியிருக்கிறார் .

Rating 3.5 / 5

Latest articles

வள்ளுவன் சினிமா விமர்சனம்

இளைஞன் வெற்றி தொடர்ச்சியாக மூன்று கொலைகள் செய்துவிட்டு இன்னொரு கொலை செய்யப் போவதாக போலீஸுக்கு தகவல் கொடுக்கிறான். ஏற்கனவே...

ஆர்யன் ஷ்யாம் நடிப்பில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றுக் காவியம்… படப்பிடிப்புக்கு பரபரப்பாக தயாராகும் படக்குழு!

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை...

மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் கூட்டணியின் திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் காணலாம்!

ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி...

விஜய் ஆண்டனி இயக்குநர் சசி கூட்டணியின் ‘நூறு சாமி’ படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் திரண்ட முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகள்! 

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும்...

More like this