HomeGeneral450 மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்! 13ம் ஆண்டு சேவையை பாராட்டும்...

450 மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்! 13ம் ஆண்டு சேவையை பாராட்டும் ஏழை மாணவர்கள்!

Published on

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில், “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை” மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான் இன்னும் அதிக அளவில் இலவச உயர் கல்வி வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ,மாணவிகளை தேர்வு செய்து அவர்கள் உயர் கல்வி பயில தேவி அறக்கட்டளை உதவி செய்து வதுகிறது.

அந்த வகையில், தற்போது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை இல்லாத மாணவர்-மாணவியர்கள், குடும்பத்தின் முதல் பட்டதாரி, நல்ல மதிப்பெண் பெற்றும் மேல் படிப்பு படிப்பதற்கான வசதி இல்லாதவர்கள் என முதல் கட்டமாக 20 பேரை தேர்வு செய்துள்ளது, தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை.

கல்வி நிலையங்களான சத்யபாமா பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, நெல்லை நாடார் கல்லூரி, ஏ.சி.எஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சென்னையின் பிரபல கல்லூரிகள் மூலம் தேவி அறக்கட்டளை உயர் கல்வி பயில உதவி செய்து வருகின்றது.

தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை சுமார் 450- க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயின்று, சிறந்த நிறுவனங்களில், உயரிய பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். வெளியில் பணியாற்றி கொண்டிருந்தாலும்,
தங்களை படிக்க வைத்து இந்த நல்ல நிலமைக்கு கொண்டு வந்த தேவி அறக்கட்டளையிலும் தொண்டாற்றி வருகிறார்கள். இவர்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு மாணவர்கள் அழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தி முதல் கட்டமாக தகுதியுள்ள 20 மாணவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அடுத்த கட்ட பணி நடந்து வருகிறது.

Devi Social and Educational Foundation

Email ID – devifoundationchennai@gmail.com

Contact Landline – 044 42055970
Contact Mobile – 8248503354

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this