HomeMovie Reviewபிளாஸ்ட் சினிமா விமர்சனம்

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

Published on

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட் தொழிலதிபருக்கும் மோதல் உருவாக, அதன் விளைவாக நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் பிளாஸ்ட், பிளாஸ்ட், பிளாஸ்ட்… காட்சிக்கு காட்சி ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட்… இயக்கம் சுபாஷ் கே ராஜ்

கராத்தே மாஸ்டராக ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன். எதிரிகள் கத்தி, அரிவாள், வெடிகுண்டு, துப்பாக்கி சகலவிதமான ஆயுதங்களோடு வரிசை கட்டி வந்து கொண்டேயிருக்க அத்தனைப் பேரையும் போட்டுப் பொளக்கிறார். ஆக்சனில் அனல் பறக்கிறது.

தன் அப்பா அர்ஜுனால், சிறுவயதிலிருந்தே எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கணும் என சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டு, சிறுவயதிலிருந்தே கராத்தே கற்று துணிச்சல் மிக்கவராக வளர்ந்த பெண்ணாக பிரீத்தி முகுந்தன். ஆக்சன் கிங்கோடு சேர்ந்து எதிரிகளை துவம்சம் செய்யும்போது வெறித்தனம் காட்டுகிறார். அர்ஜுனுக்கு மனைவியாக வருகிற அபிராமியும் பத்ரகாளியாக மாறி சதிகாரக் கும்பலை பறந்து பறந்து சுளுக்கெடுக்கிறார்.

கராத்தே குடும்பத்தில் ஒருவராக வருகிற விவேக் பிரசன்னாவுக்கும் அடிதடியில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

கார்ப்பரேட் வில்லன்கள் வழக்கமாக செய்கிற அத்தனை கொடூரங்களையும் கெத்தாக செய்கிறார் ஜான் கொக்கேன். பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் வில்லன்களாக களமாடியிருக்கிறார்கள்.

படம் முழுக்க ஆக்சன் அதிரடியாக இருக்க பின்னணி இசையில் தெறிக்கவிடுகிறார் ரவி பஸ்ரூர். அசோக் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை அதிகரிக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை, அதிலிருக்கும் திருப்பங்கள், கேரக்டர்களுக்கேற்ற நடிகர் நடிகைகள், இசை, ஒளிப்பதிவு என அத்தனையும் பலம். படம் ஆக்சன் சப்ஜெக்ட் பிரியர்களுக்கு 100% உற்சாகம் தரும்!

Rating 3.5 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this