HomeGeneralகரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்! மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத்...

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்! மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

Published on

வேகமாக மாறிவரும் பொழுதுபோக்குத் தேவைகளை கருத்தில் கொண்டு, கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) எனும் தமிழ் நாட்டின் முதல் – ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ-டிராமா தளத்தை  கரண் தயாநிதி மாறன் இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்கான மொபைல் பொழுதுபோக்கு உலகில் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் மொபைல் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிமிட சினிமா தரத்திலான தொழில்நுட்ப வல்லமையுடன் உருவான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை கதைஷாட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. தொடக்கத்தில் தமிழில் மட்டும் கவனம் செலுத்தவுள்ள கதை ஷார்ட்ஸ், அடுத்த ஒரு வருடத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் தனது சேவைகளை அந்த நிலத்தின் தன்மையுடன் உருவாகும் ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் வட்டார வழக்கு, கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்ட கதைகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ டிராமாக்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே கதைஷார்ட்ஸின் நோக்கமாகும். முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் மைக்ரோ டிராமாக்களை உருவாக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய கதைஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி மாறன், “பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவரும் சூழ்நிலையில், அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மைக்ரோ டிராமாவுக்கான பிரத்யேக தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.
கதைஷார்ட்ஸ் இந்த துறையில் முன்னணி வகிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்றார்.
கதைஷார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சபரிஷ் வெங்கட் கூறுகையில், “சிறந்த தனிப்பட்ட பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மையமாகக் கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான, கலாச்சார ஆழமிக்க கதைகளை சிறந்த தொழில்நுட்பத்தில் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.
பார்வையாளர்கள் வெறும் இருபது ரூபாய் செலுத்தி கதைஷார்ட்ஸ்  செயலியில் மைக்ரோ டிராமாக்களை கண்டு களிக்கலாம். வெர்டிக்கல் வடிவ பொழுதுபோக்கு துறைக்கான அடுத்த தலைமுறை திறமைகளை உருவாக்கும் நோக்கில், கதைகிளப் எனும் புதிய முன்னெடுப்பையும் கதைஷார்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
12,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்டோருக்கு மைக்ரோ-டிராமா சூழலியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.
2027 மார்ச் மாதத்திற்குள் 4,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கதைஷார்ட்ஸின் இலக்காகும். மேலும், கதைசொல்லலுடன் இயல்பாக இணையும் பிராண்ட் இன்டக்ரேஷன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான வணிக மேம்பாட்டுக்கான மார்க்கெட்டிங் மாடல்களையும் செயல்படுத்த இத்தளம் திட்டமிட்டுள்ளது.

Latest articles

பிரபல ஒளிப்பதிவாளர் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘ரஞ்சன்’ படக்குழு!

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் 'ரஞ்சன்' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று...

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ உலகமெங்கும் ஜூலை 31-ம் தேதி வெளியாகிறது!

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ள...

தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் ரீமேட்ச் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்… கதைநாயகனான KPY பாலா! 

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும்...

லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்...

More like this