HomeGeneralஇயக்குநர்கள் வெங்கட் பிரபு, பொன்ராம் பங்கேற்பில் 'தத் த்வம் அஸி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பொன்ராம் பங்கேற்பில் ‘தத் த்வம் அஸி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமாக உருவாகும் தத் த்வம் அஸி 2026′ படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 26 அன்று இனிதே துவங்கியுள்ளது. இந்த படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மிக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை ஜெ கே சரவணா மற்றும் ஜெ கே சதீஷ் தயாரிக்கின்றனர். பிரேம் ஜி அமரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் கே எல் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார். எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான ‘ஆர்ய கேரள வர்மன்’ படமும் வரலாறு மற்றும் ஆன்மிக பின்னணியில் உருவாகி வருகிறது.

Latest articles

லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்...

விறுவிறுப்பாக நடக்கும் சிலம்பரசன் டி ஆர் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு!

சிலம்பரசன் டி ஆர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் - எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம்...

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவக்கம்!

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் துவங்குகிறது. ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான...

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை சொல்லும் ஆல் பாஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட்' மோகனா ஆர் தயாரித்துள்ள படம் 'ஆல் பாஸ்.' 'நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த...

More like this