HomeGeneralதுல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!

Published on

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் (SLV Cinemas) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.
வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.
பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this