HomeCinemaபவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த 'லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பவிஷ், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன் நடித்த ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

படத்தில் பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தெலுங்கு யூ டியூபர் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இசையை FOXn என்ற இசையமைப்பாளர் ஜோடி (பிரதீப் PJ & Wayne Pavey) அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பி ஜி முத்தையா கவனித்துள்ள நிலையில், தேசிய விருது பெற்ற என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை P. மகேந்திரன் கவனித்துள்ளார்.

தயாரிப்பாளர்களான தினேஷ் ராஜ் மற்றும் G. தனஞ்ஜெயன் ஆகியோர் படப்பிடிப்பு முழுவதிலும் நேரடியாக ஈடுபட்டு, இயக்குநரின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப படம் சிறப்பாக உருவாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இளைஞர்களின் உறவுகளை நவீன கோணத்தில், உணர்ச்சிப் பூர்வமாகவும், மனதைத் தொடும் வகையிலும் சொல்லும் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஒரு சில வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors G. தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

Latest articles

மதுரை மண்ணின் கலாச்சார திருவிழாவாக மாறிய சூர்யாவின் ‘கருப்பு ‘திரைப்பட இசை வெளியீட்டு விழா

சூர்யாவின் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை...

அஞ்சாமை டூ பிரேக்பாஸ்ட்… இளம் நடிகர் க்ரித்திக் மோகனின் அசத்தலான பயணம்!

தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான்...

புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் டிராமா ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமாகிறது!

வால்வாட்சர் ஃபிலிம் நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர்...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல்...

More like this