HomeCinemaஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் 'பிளாஸ்ட்' விரைவில் வெளியாகிறது!

ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ விரைவில் வெளியாகிறது!

Published on

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து  முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களின்  வரவேற்பை பெற்றுள்ளது.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், “அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது  அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட அன்பான  குடும்பத்திற்கும் தீமை ஒன்றையே குறிக்கோளாக கொண்ட, எதற்கும் துணிந்த ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மையக்கரு. எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்  தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை  இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்,” என்றார்.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றியுள்ளனர்.
ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர்.
‘கே ஜி எஃப்’ படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை  கையாண்டுள்ளார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை  வடிவமைத்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this