HomeCinemaமிஸ்டர் எக்ஸ் சினிமா விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் சினிமா விமர்சனம்

Published on

மேக்கிங்கில் மிரட்டும் ஸ்பை திரில்லர்.

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது. அந்த மாநாட்டில் அணு ஆயுத சக்தியைக் கொண்டு மோசமான விளைவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் பயங்கரவாதி ஒருவன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சதித் திட்டத்தை முறியடிக்க களமிறங்குகிறார் இந்திய உளவாளியான இந்த கதையின் ஹீரோ.

அவரது செயல்பாடுகளும் அவர் சந்திக்கும் சவால்களும் அடுத்தடுத்த காட்சிகளாக பரபரக்க, ஒருவழியாக சதித்திட்டம் முறியடிக்கப்படுகிறது. அது எப்படி? என்பது மனு ஆனந்த் இயக்கியிருக்கும் மிஸ்டர் எக்ஸின் கிளைமாக்ஸ்

உளவாளியாக ஆர்யா. உடற்கட்டின் பிரமாண்டம் ஆச்சரியப்படுத்துகிறது. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டவராக களம் கண்டிருப்பவர் வேகமும் விவேகமும் கலந்த நடவடிக்கைகளால் எதிராளிகளை வேட்டையாடும் விதம் அசத்துகிறது. அப்பா மீதான வெறுப்புணர்வு, காதலி மீதான நேசம் என எமோஷனல் ஏரியாவிலும் பொருத்தமான நடிப்போடு புகுந்து புறப்படுகிறார்.

அணு ஆயுத பயங்கரவாதியாக கெளதம் கார்த்திக். கியூட்டான சிரிப்புடன் தன்னால் முடிந்த வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். அவரது ஃபிளாஷ்பேக் காட்சிகள் கவனம் பெறுகிறது.

ஹீரோவின் பார்வையில் கோழை, இந்திய தேசத்தின் பார்வையில் ஹீரோ என கதையில் முக்கியத்துவம் வாய்ந்த உளவாளி கேரக்டருக்கு சரத்குமார் தந்திருக்கும் அனுபவ நடிப்பு கெத்து.

இந்திய உளவாளிகளின் தலைமையகமான ரா அமைப்பின் தலைமை அதிகாரியாக மஞ்சு வாரியர். தேசப்பற்றும் அதிகார பலமும் கலந்த சிங்கப் பெண்ணாக நடிப்பில் பிரதிபலித்திருக்கும் கம்பீரம் கவர்கிறது.

ரைசா வில்சன், அதுல்யா, அனகா, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், மோகன் ராம் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்க, ஹாலிவுட் படத்திற்கான பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகளை பல மடங்கு பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட்.

ஸ்டன்ட் சில்வாவின் பங்களிப்பில் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது.

பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கும் திபு நினன் தாமஸ் ‘ஹையோடி’ பாடலின் இசையில் மனதுக்கு இதமூட்டுகிறார்.

அநாவசியம் என்று நினைக்கத் தோன்றுகிற அளவிலான ஃபேமிலி சென்டிமென்ட், லாஜிக் என்றால் என்ன என்று கேட்பது போலிருக்கிற சிலபல சம்பவங்கள் படத்தின் பலவீனமாக இருக்க,

நாட்டைக் காக்கும் பணியில் உளவாளிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு ரிஸ்க்கானது என்பதையும் அவர்களின் தியாகத்தையும் எடுத்துக் காட்டியிருல்க்கும் விதம் உண்மையிலேயே சிலிர்ப்பூட்டுபவை.

மிஸ்டர் எக்ஸ் – ஜெய்ஹிந்த்!

Rating 3 / 5

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this