HomeGeneralமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் குற்றம் கடிதலைத் தொடர்ந்து ‘குற்றம் கடிதல் 2' பல சர்வதேச திரைப்பட விழாக்களில்...

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் குற்றம் கடிதலைத் தொடர்ந்து ‘குற்றம் கடிதல் 2′ பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது!

Published on

2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

இப்போது, அதன் தொடர்ச்சியாக குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப் பின்னணியைத் தக்க வைத்துள்ளது.

நடிகர் பாண்டியராஜன் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த உள்ளார்.

படத்தின் காட்சிகளைப் பார்த்தவர்கள், அதன் சிறப்பான தயாரிப்பையும், சுவாரஸ்யமான கதை சொல்லலையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.

குற்றம் கடிதல் 2 திரைப்படம் கொடைக்கானல் , திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் சென்னை ஆகிய சுற்றுப்புறங்களில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், P. L. தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின் , ஜோவிதா லிவிங்ஸ்டன் , ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை S. K. ஜீவா மற்றும் JSK சதிஷ் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this