HomeCinemaLik சினிமா விமர்சனம்

Lik சினிமா விமர்சனம்

Published on

இன்றைய காலகட்டத்தில் எதை செய்வதாக இருந்தாலும் செயலி என்கிற ஆப் தேவைப்படுகிறது. அந்த வகையில், ஆப் மூலமாகத்தான் காதலிக்க முடியும் என்கிற 2040 காலகட்டத்தில் இந்த கதை நடக்கிறது.

அப்படி ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்க Lik என்ற ஆப் பாலமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஆப், அந்த ஜோடியின் காதல் கெமிஸ்ட்ரி பலவீனமாக இருக்கிறது என்று சொல்ல, காதலர்கள் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் எப்படியும் சேர்வார்கள் என்பதுதான் கதையின் முடிவாக இருக்கும். அதன்படியே சேர்கிறார்கள். அது எப்படி என்பதுதான் திரைக்கதை…

பிரதீப் ரங்கநாதன் ஹீரோயினை எப்படியெல்லாம் காதலிப்பார் என்பது தெரிந்த கதை. அப்படியே இந்த படத்திலும் காதலிக்கிறார்; பிரேக் அப்பால் மனம் உடைகிறார். தன் காதலை கெடுத்த ஆப்’பை புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் முடக்குகிறார். அந்த செயல்பாடுகள் ஓரளவு கவனம் ஈர்க்கின்றன.

Lik ஆப் மூலம் தனி உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறவராக எஸ் ஜே சூர்யா, பந்தாவும் காட்டியிருக்கிறார்; அசத்தலான வில்லத்தனமும் காட்டியிருக்கிறார்.

ஹீரோவுடன் காதல், மோதல் என கிர்த்தி ஷெட்டி தன் பங்களிப்பை பக்காவாக செய்திருக்கிறார்.

சீமான் ஹீரோவின் அப்பாவாக வருகிறார்; மொபைல் போன் உள்ளிட்ட எந்தவொரு டெக்னாலஜி வாசனையுமில்லாத ஆர்கானிக் ஏரியாவை உருவாக்கி அதற்கு தலைவராக இருக்கிறார். அதெல்லாம் அவர் நிஜத்தில் செய்ய நினைப்பது, அதை திரையில் செய்திருக்கிறார். கெளரி கிஷன் கவர்ச்சியாக வந்து போகிறார். யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் ‘பட்டுமா’ பாடலும் பின்னணி இசையும், ரவிவர்மாவின் ஒளிப்பதிவும் படத்தின் பலமாகியுள்ளது.

‘எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம்’ என யோசித்து ஒரு காதல் கதையை, அதற்கேற்ற திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன், தொழில்நுட்ப ரீதியாக படத்தை பிரமாண்டமாக்கியிருக்கிறார். காதல் கதைக்கு உணர்வுபூர்வமான திரைக்கதையே போதுமானது. அதில் கவனம் செலுத்தாததால் வெற்றிப் படங்கள் வரிசையில் இந்த படம் இணையாததற்கு காரணமாகியிருக்கிறார்

Rating 1.5 / 5

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...
இன்றைய காலகட்டத்தில் எதை செய்வதாக இருந்தாலும் செயலி என்கிற ஆப் தேவைப்படுகிறது. அந்த வகையில், ஆப் மூலமாகத்தான் காதலிக்க முடியும் என்கிற 2040 காலகட்டத்தில் இந்த கதை நடக்கிறது. அப்படி ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்க Lik என்ற ஆப் பாலமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஆப், அந்த ஜோடியின் காதல் கெமிஸ்ட்ரி பலவீனமாக இருக்கிறது என்று சொல்ல, காதலர்கள் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள்...Lik சினிமா விமர்சனம்