HomeGeneralஅல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியான ராக்கா படத்தின் டைட்டில் போஸ்டர்! அட்லி இயக்கத்தில் உருவாகிறது.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் வெளியான ராக்கா படத்தின் டைட்டில் போஸ்டர்! அட்லி இயக்கத்தில் உருவாகிறது.

Published on

அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.
“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய  முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் முறையால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்குகிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீ கூறியதாவது..,
“ராக்கா”  சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை  என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”
சன் பிக்சர்ஸ் Sun Pictures நிறுவனம்  கூறியதாவது..,
“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும்  இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”
இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன்  மற்றும் அட்லீ  ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில்  உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.
“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம்  உருவாகி வருவதை உறுதி செய்கிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this