HomeCinemaமதுரை கிராமத்துப் பெண்ணாக நடித்ததை பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்! -முத்து என்கிற காட்டான்...

மதுரை கிராமத்துப் பெண்ணாக நடித்ததை பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்! -முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் பிரஸ் மீட்டில் வி ஜே பார்வதி   

Published on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் விஜய் சேதுபதி பேசுகையில், ”முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.

நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.

ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.

இதுபோல் பல சமயங்களில்… இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.

ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் ‘ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்’ என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌

மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.

2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.

ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன் பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.

இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், ”இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்” என்றார்.

Latest articles

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தொழில்துறை சூழலை பாதுகாக்க ஒன்றிணைகின்றனர்; புதிய சங்கத்திற்கான வழிநடத்தல் குழு அமைப்பு

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 அன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

More like this

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தொழில்துறை சூழலை பாதுகாக்க ஒன்றிணைகின்றனர்; புதிய சங்கத்திற்கான வழிநடத்தல் குழு அமைப்பு

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 அன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...