HomeCinemaபாரத் – சான்வே மேக்னா நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!

பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!

Published on

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா தமிழ்த் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.  தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜென் ஸீ சென்சேஷன் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படப்புகழ் சான்வே மேக்னா கதாநாயகியாகவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.
‘மாவீரன்’, ’3BHK’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ மூலம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this