HomeCinemaநடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது!

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது!

Published on

நடிகர் சூரி, இயக்குநர் ஆர். ரவிகுமார் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது.
தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின்  வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.
நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘கொட்டுக்காளி’, ’விடுதலை’, ’மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ’இன்று நேற்று நாளை’ மற்றும் ’அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ’டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் #சூரி07/ #மைத்ரிதமிழ்03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this