HomeCinemaகுறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர்! -பி.டி.செல்வகுமார் பேட்டி கண்டனம்

குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர்! -பி.டி.செல்வகுமார் பேட்டி கண்டனம்

Published on

குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச தகுதியில்லாதவர் என திரைப்பட தயாரிப்பாளரும், மாநில திமுக வர்த்தகர் அணி துணை செயலாளருமான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; எப்போதுமே அடிக்காத குழந்தையும், முறிக்காத முருங்கையும் உதவாமல் தான் போகும். அதுபோலத்தான் ஆதவ் அர்ஜூனா விஜய்யுடன் வந்து சேரும் போதே எனக்கு தெரியும் விஜய்யும், தவெகவும் உருப்படாது என்பது. படையப்பா, முத்து உள்ளிட்ட படத்தில் நான் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து பணியாற்றும் போதே ரஜினிகாந்த் அவர்களின் மனிதநேயம் குறித்து தெளிவாக தெரிந்து கொண்டேன்.

ரஜினி அவர்களுடன் பணிபுரிந்த பண்டரிபாய், ஹேமநாத் பாபு, வி.கே.ராமசாமி, கலைஞானம், சத்யா ஸ்டுடியோ பத்மநாபன், ஏ.வி.எம். ராஜா ஆகியோருக்கு அருணாச்சலம் படத்தை தயாரித்து பெரும் தொகை உதவியாக வழங்கினார். அப்போது இது பரபரப்பாக பேசப்பட்டது.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தார். ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிராக பேசினார். இனி ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கர்ஜித்தவர். கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க ஆளும் கட்சி மறுத்த போது எதிர்த்து நின்றவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தைச் சேர்ந்த லதா என்ற பெண்ணை திருமணம் செய்து இன்று வரை அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சினிமாத்துறையில் தன்னுடன் இருந்த விட்டல் கிருஷ்ண ராவ் முரளி ஆகியோருக்கு அப்பார்ட்மென்ட் வழங்கினார். மேலும் தனக்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கேளம்பாக்கத்தில் 1 கிரவுண்ட் நிலம் வழங்கினார். இத்தனை பண்பாடு மிகுந்தவர்.
இலங்கை பிரச்சினையின் போது என்னுடைய ரசிகர்கள் படையுடன் இலங்கைக்கு செல்வேன் என துணிச்சலாக பேசியவர்.

இப்படி பல்வேறு பிரச்சினைகளை ஆளுமையுடன் எதிர்த்து நின்ற ரஜினிகாந்த் அவர்களை பொதுவெளியில் பயந்தார் என்று பேசுவதற்கு குறுக்கு வழியில் வந்த ஆதவ் அர்ஜூனா ரஜினிகாந்த்தைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. திரைப்படத் துறையைச் சார்ந்தவன் என்ற வகையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Latest articles

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின்...

‘உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

மே மாதம் ஜியோஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு...

என்டிஆர் நடித்துள்ள ‘NTRNeel’ திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் என்டிஆர் பிறந்த தினமான மே 20 அன்று வெளியாகிறது!

'NTRNeel' திரைப்படம் 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர்...

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள ’29’ திரைப்படத்தை White Carpet Films விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet...

More like this