HomeMovie Review99 / 66 சினிமா விமர்சனம்

99 / 66 சினிமா விமர்சனம்

Published on

ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் சற்றே வித்தியாசமான அணுகுமுறையில், புத்தரின் கொள்கைகளை மையப்படுத்தி கதை சொல்லியிருக்கும் படம்.

ஒரு பிளாட்டில் 66-ம் எண் வீட்டில் குடியிருக்கும் சங்கீதா மீது, 66-ம் எண் வீட்டில் வசித்து, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதா என்ற பெண்ணின் ஆவி புகுந்து கொள்கிறது. அந்த ஆவிக்கு யாரையும் பழி வாங்கும் நோக்கமில்லை என்று ஒரு சாமியார் சொல்கிறார். ஆனாலும் சங்கீதா, ஆவி புகுந்தவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்களோ அப்படியெல்லாம் டெரராக நடந்துகொள்கிறார்.

அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பில் நிமிர்ந்து உட்கார்கிறோம். ரஞ்சிதாவை கொலை செய்தது யார், காரணம் என்ன? சங்கீதாவுக்குள் ரஞ்சிதா நுழைந்த நோக்கம் என்ன? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லச் சொல்ல அதிர்ச்சி தாக்குகிறது…

ரக்சிதா மகாலெஷ்மி உணர்வுகளை துல்லியமான முகபாவங்களால் வெளிப்படுத்துவதில் தேர்ந்தவர். நிஜத்தில் இல்லாத பெண்ணை சந்தித்துப் பேசுவது, தான் வித்தியாசமாக நடந்துகொள்வது தெரிந்து அதிர்ச்சியடைவது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை துணிச்சலாக களமிறங்கி அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்வது, தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்ட நபரை அவர் திருந்தும்படி தண்டிப்பது என ஒவ்வொரு காட்சிக்கும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

ரஞ்சிதாவாக ஸ்வேதா டோரத்தி. சிரித்தால் அழகு அள்ளுகிற அந்த பளபள முகத்தில் துரோகத்தின் வலி வெளிப்படுவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்ற புத்தரின் கொள்கையில் வாழ்பவர், இறந்தபின்னும் பழிவாங்கும் உணர்ச்சியின்றி கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களைப் பாதுகாப்பதை கடமையாக கருதி செய்வது கேரக்டர் மதிப்புமிக்கதாக மாற்றுகிறது.

சபரி ரக்சிதாவுக்கு கணவர்; ரஞ்சிதாவின் கணவர் ரேஹிந்த். பாசமான தந்தையாக எம் எஸ் மூர்த்தி, சாமியார்களாக கே ஆர் விஜயா, பி எல் தேனப்பன், காமெடிக்கு ஜாவா சுந்தரேசன், முல்லை, கோதண்டம் கூட்டணி… எல்லோருமே அளவாய் நடித்திருக்கிறார்கள்.

எம் எஸ் மூர்த்தி இசையமைத்துள்ள பாடல்களில் ஆன்மிக அதிர்வலை திரையரங்கில் பரவுகிறது. ஹாரர் ஜானருக்கு பலம் தரும் விதமாக பின்னணி இசையமைத்துள்ளார் (பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன்) அமர்கீத். ஒளிப்பதிவின் நேர்த்தியில் படம் வேறொரு பரிமாணத்திற்கு சென்றிருக்கிறது.

கிளைமாக்ஸில் ரஞ்சிதாவின் ஆவி ‘பெண்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் அங்கே வந்து நிற்பேன்’ என்று சொல்லும்போது அடுத்த பாகம் வரலாம் என்று தோன்றுகிறது.

99 / 66 – பெண் என்றால் பேயும் இங்கும்!

Rating 3 / 5

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this