HomeCinema'கூச முனிசாமி வீரப்பன்' டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லர் வெளியீடு!

‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லர் வெளியீடு!

Published on

ஜி5 ஓடிடி தளம் தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது.

சீரிஸ் வரும் டிசம்பர் 8-ம் தேதி ஜி5 தளத்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது!

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது. இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரிஜினல் தமிழ் சீரிஸான ​​’கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) வியத்தகு என்கவுண்டரில் தனது முடிவைச் சந்தித்தார். வரலாறாக மாறிய அவரது வாழ்க்கைகதை காவல்துறை ஆவணங்களின் ஒரு பகுதியாக உள்ளது. வரவிருக்கும் ZEE5 தமிழ் ஒரிஜினல் சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்பது வீரப்பனால் அவரது வார்த்தைகளில் விவரிக்கப்படும் ஒரு தனித்துவமான ஆவணம் ஆகும். இந்த சீரிஸ் அவர் வாழ்வின் மீது ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this